ரெடியான பீகார்.. சட்டசபை தேர்தல் எப்போது? இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் சொன்ன தகவல்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் நவம்பர் 22ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.
பீகாரில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையத்தை சேர்ந்தவர்கள் பீகாரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வை தொடர்ந்து பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகதிகள் உள்ளன. இதில் 2 தொகுதிகள் எஸ்டி பிரிவை சேர்ந்தவர்களுக்கானது. 38 தொகுதிகள் எஸ்சி பிரிவை சேர்ந்தவர்களுக்கானது. பீகார் சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 22ம் தேதி முடிவுக்கு வர உள்ளது. அதற்கு முன்பாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும்.
தேர்தல் ஆணையம் சார்பில் பூத் லெவல் ஆபிசர்களுக்கு முதல் முறையாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் ஜூன் 24ம் தேதி தொடங்கியது. அதன்பிறகு குறித்த காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம். சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். சாத் பண்டிகை கொண்டாடுவது போல் ஜனநாயக திருவிழாவான சட்டசபை தேர்தலையும் கொண்டாட வேண்டும்'' என்று கூறினார்.
பீகாரில் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு மொத்தம் 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.தற்போது பாஜக கூட்டணிக்கு 131 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் பாஜகவுக்கு 80 எம்எல்ஏக்கள், ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 45 தொகுதிகள், ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா (செக்குலர்) கட்சிக்கு 4 எம்எல்ஏக்கள், 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் என்று மொத்தம் 131 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சிக்கு 77 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்எல்ஏக்கள், சிபிஐ (எம்எல்) கட்சிக்கு 11 எம்எல்ஏக்கள், சிபிஐ (எம்), சிபிஐ கட்சிக்கு தலா 2 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications