தேஜஸ்வி யாதவ் வெல்வாரா? பீகாரில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு.. முதற்கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது
பாட்னா: பீகாரில் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (நவம்பர் 6) ம்தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. முதற்கட்டமாக பீகாரில் 18 மாவட்டங்களில் 121 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் துணை முதல்வரான பாஜகவின் சாம்ரத் சவுத்ரி, ஆர்ஜேடி கட்சியின் தலைவரும், ‛இந்தியா' கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியிடும் தொகுதியில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. பீகாரில் முதற்கட்ட தேர்தல் நவம்பர் 6ம் தேதியும், 2வது கட்ட தேர்தல் நவம்பர் 11ம் தேதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்பிறகு நவம்பர் 14ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
பீகாரை எடுத்து கொண்டால் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

பீகாரில் பாஜக கூட்டணி மற்றும் ‛இந்தியா' கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பீகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதைய முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக்ஜன சக்தி (ராம்விலாஸ்), முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சியின் எச்ஏஎம் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகள் உள்ளன.
மறுபுறம் எதிர்க்கட்சிகள் ‛மகாகத்பந்தன்' என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடிஎனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் லிபரேஷன் - சிபிஐஎம்எல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிசோரின் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்கள், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். முதற்கட்டமாக நாளை மறுநாள் (நவம்பர் 16) 18 மாவட்டங்களில் உள்ள 121 சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தொகுதிகளில் பகிரங்க பிரசாரம் இன்று மாலை 5 மணிக்கு முடிவடைநக உள்ளது. அதன்பிறகு வீடு வீடாக சென்று வாக்குசேகரிக்கும் பணியில் கட்சியினர் ஈடுபட உள்ளனர்.
முதற்கட்டமாக நடக்கும் தேர்தலில் மொத்தம் 1,206 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 11,192 பேர் ஆண் வேட்பாளர்கள். 122 பேர் பெண் வேட்பாளர்களாக உள்ளனர். மொத்தம் 2.14 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். இதில் 14 லட்சம் பேர் முதல் முறையாக ஓட்டளிக்க உள்ளனர். 4 லட்சம் வாக்காளர்கள் சீனியர் சிட்டிசன்களாக உள்ளனர். இந்த தேர்தலுக்காக வாக்குச்சாவடி மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முதற்கட்ட தேர்தலில் சில முக்கிய தலைவர்கள் போட்டியிடுகின்றனர். அதன்படி பார்த்தால் ஆர்ஜேடி கட்சியின் தலைவரும், ‛இந்தியா' கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் ராகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதி லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியாகும். இந்த தொகுதியில் கடந்த 1995,2000ம் ஆண்டில் நடந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் வெற்றி பெற்றார்.
பாஜகவின் சதீஷ் குமார் கடந்த 2010 தேர்தலில் லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவியை 13 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதன்பிறகு கடந்த 2015, 2020 தேர்தல்களில் இந்த தொகுதியில் தேஜஸ்வி யாதவ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது 3வது முறையாக போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் தேஜஸ்வி யாதவ் உள்ளார்.
அதேபோல் லாலு பிரசாத் யாதவின் இன்னொரு மகன் தேஜ் பிராத் யதாவ் தனி கட்சியை தொடங்கி உள்ளார். இவர் மஹூவா தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தந்தை லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சியின் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள முகேஷ் குமாரை எதிர்த்து களமிறங்கி உள்ளார். மேலும் தற்போதைய துணை முதல்வரான சாம்ராட் சவுத்ரி பாஜக சார்பில் தாராபூர் தொகுதியில் களமிறங்கி உள்ளார். இந்த தொகுதிக்கும் முதற்கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
அதேபோல் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மாநில தலைவர் உமேஷ் குஷ்வாஹா மக்நார் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இந்த தொகுதியில் அவர் கடந்த 2015 தேர்தலில் வெற்றி பெற்றார். இப்போது சிட்டிங் எம்எல்ஏவாக ஆர்ஜேடி கட்சியின் பினா சிங் உள்ளார். அவரை எதிர்த்து உமேஷ் குஷ்வாஹா களமிறங்கி உள்ளார். இதுதவிர இன்னும் பல பிரபலங்கள் முதற்கட்ட தேர்தல் களத்தில் உள்ளனர். இதனால் நாளை மறுநாள் நடக்கும் ஓட்டுப்பதிவு அதிக கவனம் பெற்றுள்ளது.
அதன்பிறகு இரண்டாம் கட்டமாக வரும் 14ம் தேதி மீதமுள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. பிறகு நவம்பர் 16ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
-
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல்












Click it and Unblock the Notifications