புதிய பாஜக கூட்டாளிகளுடன் இணைந்து நிதிஷ் முதல் ஆட்டம்.. லாலு கட்சி சபாநாயகரை நீக்க கோரி நோட்டீஸ்
பாட்னா: பீகார் சட்டசபை சபாநாயகரான லாலுவின் ஆர்ஜேடி கட்சி ஆவாத் பிகாரி சவுத்ரியை பதவி நீக்கம் செய்யக் கோரி முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ, அதன் புதிய கூட்டணி கட்சியான பாஜக எம்.எல்.ஏக்கள் நோட்டீஸ் கொடுத்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் 2020 சட்டசபை தேர்தலில் பாஜக- நிதிஷ்குமார் ஜேடியூ வென்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் 2022-ல் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார் நிதிஷ்குமார். இதனைத் தொடர்ந்து லாலுவின் ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து நிதிஷ்குமார் மீண்டும் முதல்வரானார்.

தற்போது ஆர்ஜேடி-காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ்குமார் நேற்று தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 4 ஆண்டுகளில் 3-வது முறையாக நேற்று மாலை பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வரானார் நிதிஷ்குமார். பீகாரில் நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றது 9-வது முறையாகும்.
தற்போது பாஜக-நிதிஷ்குமாரின் ஜேடியூ புதிய ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக பீகார் சட்டசபை சபாநாயகராக உள்ள லாலுவின் ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த ஆவாத் பிகாரி சவுத்ரியை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளது. ஆவாத் பிகாரி சவுத்ரிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை பாஜக, நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி எம்.எல்.ஏக்கள் கொடுத்துள்ளனர்.
பீகார் சட்டசபையில் தற்போது பாஜக- ஜேடியூ கூட்டணிக்கு மொத்தம் 128 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 112 எம்.எல்.ஏக்கள். ஆர்ஜேடி- காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணிக்கு மொத்தம் 114 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. தற்போது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் பீகார் சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து தமக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications