கரை சேருமா கூட்டணி? 'INDIA' பெயருக்கு நிதிஷ் குமார் எதிர்ப்பு? காங். நடந்து கொண்ட விதத்தால் அப்செட்
பாட்னா: எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கூட்டணிக்கு வைக்கப்பட்ட இந்தியா பெயருக்கு நிதிஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் எனத் தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. மத்தியில் 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் புதிய வியூகம் வகுத்துள்ளது. பிரிந்து கிடந்தால் பாஜகவிற்கே சாதகமாக மாறும் என கருதிய எதிர்கக்ட்சிகள் ஒரே அணியில் திரண்டு ஒருங்கிணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளன.

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முழு வீச்சில் ஈடுபட்டார். பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் கடந்த இரு தினங்களாக கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்றது. இந்தந் கூட்டத்தில் 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தியா பெயர்: சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்வ்ரிவால், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பெங்களூரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டது. I.N.D.I.A என்ற பெயரை அதாவது இந்திய தேசிய வளர்ச்சி கூட்டணி (இந்தியா) என்று பெயரிடப்பட்டுள்ளது. மோடிvs இந்தியா என்ற பிராசார கோஷத்தை முன்னெடுக்கலாம் என்ற யோசனையுடன் இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகளின் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

அதிருப்தியில் நிதிஷ் குமார்?: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த பெயரை முன்மொழிந்ததாகவும் அதை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வழிமொழிந்துள்ளன. இதனிடையே, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரை வைப்பதில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு உடன்பாடு இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டும் இன்றி காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட விதமும் நிதிஷ்குமாருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்ததாம்.
அதாவது, எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு பெயர் வைப்பது தொடர்பாக காங்கிரஸ் யாருடனும் ஆலோசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பெயரை வெளியிட்டதும் நிதிஷ் குமார் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாராம். மேலும் கூட்டத்தின் போது கூட்டணிக்கு எப்படி இந்தியா என பெயர் வைக்க முடியும் என்றும் நிதிஷ்குமார் கேள்வி எழுப்பியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
நிதிஷ் குமார் கோபப்பட மாட்டார்: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் நிதிஷ்குமாரின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. ஆனால், கூட்டணியை காங்கிரஸ் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு போனது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர்களுக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன. எனினும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லலான் சிங் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
"எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்தவர்களில் நிதிஷ் குமாரும் ஒருவர். அனைவரையும் ஒருங்கிணைத்தவர் கோபப்பட மாட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐந்து ஆண்டு காலம் நான் இருந்தேன். பிரதமர் மோடி ஒருநாளும் என்.டி.ஏ கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் தற்போது ஏன் அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். 2024 தேர்தலில் அவர்கள் தோல்வி அடைவார்கள்" என்றார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications