மக்கள் தொகையை கட்டுப்படுத்த.. பெண்கள் குறித்து நிதிஷ் கூறிய கருத்தால் வெடித்த சர்ச்சை.. விடாத பாஜக
பாட்னா: மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் பெண்கள் கல்வி கற்பதன் முக்கியத்துவம் குறித்து பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், அது குறித்து பேசிய சில வார்த்தைகள் பீகார் சட்டமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. நிதிஷ்குமாரின் கருத்து கீழ்த்தரமானது என பாஜக சாடியுள்ளது.
பீகாரில் அண்மையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் விவரங்களை அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்டார். சாதிவாரியாக மக்களின் பொருளாதார நிலைமை குறித்தும் இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய நிதிஷ் குமார் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்தும் பேசினார். அப்போது பெண்கள் குறித்து நிதிஷ் குமார் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நிதிஷ் குமார் கூறுகையில், மக்கள் தொகையை கட்டுப்படுத்த பெண்களுக்கு கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்று பேசினர். இதன் தொடர்ச்சியாக நிதிஷ் குமார் முன்வைத்த சில கருத்துக்கள்தான் அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. நிதிஷ்குமார் கூறுகையில், கணவரின் செயல்பாடுகள் தான் அதிக குழந்தை பிறப்புக்கு காரணமாகிறது. எனினும், கல்வி அறிவின் மூலம் கணவரை கட்டுப்படுத்துவது எப்படி என்பது பெண்களுக்கு தெரியும்.
தற்போது பிறப்பு விகிதம் சரிந்து வருவதற்கு இதுவே காரணம் ஆகும் என நகைச்சுவை பாணியில் பேசினார். மேலும், கருவுறுதல் விகிதம் இதற்கு முன்பு 4.3 சதவிகித ம் இருந்தது ஆனால் தற்போது 2.9 ஆக குறைந்துள்ளது. விரைவில் 2 ஆக குறையும்" என்றார். நிதிஷ்குமார் இவ்வாறு குறிப்பிட்டதும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சிரித்தனர். ஆனால், அவையில் இருந்த சில பெண் எம்.எல்.ஏக்கள் நிதிஷ்குமாரின் கருத்தால் கொஞ்சம் அசவுகரியாக உணர்ந்தையும் பார்க்க முடிந்தது.
நிதிஷ்குமாரின் இந்த பேச்சை பிடித்துக் கொண்ட பாஜக, முதல்வரின் பேச்சு மிகவும் கீழ்த்தரமானது என்று சாடியுள்ளது. இது தொடர்பாக பீகார் மாநில பாஜகவின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியா அரசியலில் நிதிஷ்குமாரை விட இழிவான அரசியல்வாதி யாரும் இருக்க மாட்டார்கள்" என மிகக்கடுமையாக விமர்சித்துள்ளது. பாஜக எம்.எல்.ஏ காயத்ரி தேவி கூறுகையில், நிதிஷ்குமாருக்கு 70-வயது ஆகிறது. அவர் முட்டாள்தனமான கருத்துகளை கூறி வருகிறார். பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு வார்த்தைகளை நிதிஷ்குமார் பயன்படுத்தியிருக்கிறார். அவரின் கருத்துக்கு எதிராக நாங்கள் போராடுவோம்" என்றார்.
இதனிடையே, நிதிஷ்குமாருக்கு ஆதரவாக பேசியுள்ள துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமார் பாலியல் கல்வி குறித்து பேசினார். இந்த டாபிக் குறித்து பேசவே மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் பள்ளிகளில் இது குறித்து கற்பிக்கப்படுகிறது. உயிரியல் மற்றும் அறிவியல் பாடங்களில் குழந்தைகள் இது பற்றி கற்றுக்கொள்கிறார்கள். எனவே இதை தவறான விதத்தில் எடுத்து செல்லக் கூடாது. நிதிஷ்குமாரின் கருத்தை திரிக்கக் கூடாது" என்றார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications