பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெற்றி சான்றிதழ்களை வேட்பாளர்களுக்கு கொடுப்பதில் எந்த நெருக்கடியும் தரப்படவில்லை- தேர்தல் ஆணையம்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை சான்றிதழ்களைத் தரக் கூடாது என முதல்வர் நிதிஷ்குமார் தரப்பில் எந்த ஒரு நெருக்கடியும் தரப்படவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் தந்துள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. ஒருகட்டத்தில் 119 வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர்; ஆனால் சான்றிதழ்களை தர மறுக்கின்றனர் எனவும் ஆர்ஜேடி-காங். குற்றம்சாட்டியது.

Bihar EC Denies Oppositions Claims On Pressure in Counting

முதல்வர் நிதிஷ்குமார் அலுவலகத்தில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதால்தான் இந்த சான்றிதழ்கள் தரப்படவில்லை எனவும் காங்கிரஸ்- ஆர்ஜேடி குற்றம்சாட்டியது. ஆனால் இதனை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.

119 தொகுதிகளில் ஆர்ஜேடி கூட்டணி வெற்றி பட்டியல் ரிலீஸ்- தேர்தல் கமிஷன் மீது சரமாரி புகார்!119 தொகுதிகளில் ஆர்ஜேடி கூட்டணி வெற்றி பட்டியல் ரிலீஸ்- தேர்தல் கமிஷன் மீது சரமாரி புகார்!

இது தொடர்பாக பீகார் தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா கூறுகையில், தேர்தல் ஆணையம் யாருடைய நெருக்கடிக்கும் உள்ளாகவில்லை. முதல்வர் நிதிஷ்குமார் அலுவலகத்தில் இருந்து சான்றிதழ்கள் தர வேண்டாம் என எந்த ஒரு நெருக்கடியும் தரப்படவில்லை என்றார்.

English summary
Bihar EC has Denied that the Opposition's Claims On Pressure in Counting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X