பீகார் எக்ஸிட் போல்.. மீண்டும் அரியணை ஏறுகிறது பாஜக கூட்டணி.. காங்கிரஸ் - தேஜஸ்வி தோல்வி -JVC poll
சென்னை: பீகார் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக JVC poll கருத்துக் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 135 முதல் 150 தொகுதிகளில் பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது என்று JVC poll தெரிவித்துள்ளது. காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 88 முதல் 103 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக JVC poll கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடந்தது. 122 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கும் பணி நவம்பர் 14 அன்று நடைபெறும். பீகார் சட்டமன்றத் தேர்தலில் 14 லட்சம் புதிய வாக்காளர்கள் உட்பட 7.4 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

பாஜக - ஜேடியூவின் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA) எதிர்க்கட்சிகளின் காங்கிரஸ் - ஆர்ஜேடியின் மகா கூட்டணியான மகாகத்பந்தனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இவர்களுடன் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன சுராஜ் கட்சியும் களத்தில் உள்ளது. இந்தத் தேர்தல், பீகாரின் அடுத்த ஐந்தாண்டு கால ஆட்சியைத் தீர்மானிக்கும் என்பதால், பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பீகார் முந்தைய தேர்தல் முடிவுகள்
பீகார் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் இந்த வேளையில், அதன் தேர்தல் வரலாறு மிகவும் போட்டி நிறைந்ததாகவும், கணிக்க முடியாத அரசியல் களமாகவும் இருந்துள்ளது. இங்கு கூட்டணிகள் அடிக்கடி மாறுவதும், இறுதி முடிவுகள் பெரும்பாலும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை மீறி வருவதும் வழக்கமாகிவிட்டது.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஒரு நூலிழை வெற்றியைத் தேடித்தந்தது. ஜனதா தளம் (ஐக்கியம்) (JDU) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான இக்கூட்டணி, பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களைவிட சற்று அதிகமாகவே பெற்றது.
லோக ஜனசக்தி கட்சி (LJP) தனித்துப் போட்டியிட்டதால் ஏற்பட்ட உள் மோதல்களுக்கு மத்தியிலும், NDA மொத்தம் 125 இடங்களைக் கைப்பற்றியது.
இந்தத் தேர்தலில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) 75 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 19 இடங்களைப் பெற்றது. ஒட்டுமொத்தமாக, மகாகத்பந்தன் (மகா கூட்டணி) 110 இடங்களை வென்றது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், RJD தலைமையிலான மகாகத்பந்தனுக்குக் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கும் என்று கணித்திருந்தன. கணிப்புகளை பொய்யாக்கி பாஜக வென்றது.
2015 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், முற்றிலும் மாறுபட்ட அரசியல் சூழ்நிலையையும், தேர்தல் முடிவையும் கொண்டிருந்தது. அப்போது JD(U) பாஜகவுடனான உறவுகளைத் தற்காலிகமாக முறித்துக்கொண்டு, RJD மற்றும் காங்கிரஸுடன் இணைந்து மகாகத்பந்தனை உருவாக்கியது.
இந்த வலிமையான கூட்டணி, 243 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 178 இடங்களை அள்ளி, பெரும் வெற்றியைக் கொடுத்தது. பாஜக தலைமையிலான கூட்டணி வெறும் 58 இடங்களுக்குச் சுருங்கி, பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
இந்த நிலையில்தான் இந்த முறை, பீகார் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக JVC poll கருத்துக் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 135 முதல் 150 தொகுதிகளில் பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது என்று JVC poll தெரிவித்துள்ளது. காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 88 முதல் 103 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக JVC poll கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications