பீகாரில் மீண்டும் நிதிஷ் – பாஜக ஆட்சி.. ஜஸ்ட் மிஸ் செய்யும் தேஜஸ்வி.. பீப்பிள்ஸ் பல்ஸ் கணிப்பு
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நிதிஷ் பாஜக கூட்டணி, தேஜஸ்வி காங்கிரஸ் கூட்டணி களத்தில் சீறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடன் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் போட்டியாளராக தன்னுடைய முதல் தேர்தலை சந்திக்கவுள்ளார். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. பீப்பிள்ஸ் பல்ஸ் வெளியிட்டுள்ள கணிப்பில் பாஜக நிதிஷ் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகள் உள்ளன. அங்கு இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த நவம்பர் 6 ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 64.66 சதவீதம் வாக்கு பதிவாகியிருந்தது. இன்று (நவம்பர் 11) 122 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 67.14 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

பீகார் தேர்தல் களம்
சுமார் 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தேசியளவில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து அங்கு மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேசிய தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள் வரை பீகாரில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆளும் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்கிறது.
பரபரக்கும் களம்
மறுபக்கம் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கு முயற்சி செய்கிறது. அதேபோல பிரபல தேர்தல் வகுப்பாளரும், ஜன்சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோரும் களத்தில் உள்ளார். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதால் பீகார் தேர்தல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
வாக்கு எண்ணிக்கை
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பின் சில முடிவுகளில் நிதிஷ்குமாரின் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளன. வாக்கு சதவீத அடிப்படையில் பாஜக, அதற்கு அடுத்து ஆர்ஜேடி அதிக வாக்குகளை பெறும் என கூறப்பட்டது. முதல்வர் தேர்வில் தேஜஸ்வி யாதவுக்கு அதிகம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. 122 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கும். வருகிற நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாய்ப்பு
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. பீப்பிள்ஸ் பல்ஸ் (Peoples Pulse) வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக - ஜேடியூ தேசிய ஜனநாயக கூட்டணி 133-159 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 75-101 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
வாக்கு சதவீதம்
பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் 0-5 தொகுதிகளிலும், மற்றவர்கள் 2-8 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. வாக்கு சதவீத அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணி 46.2 சதவீதம், காங்கிரஸ் கூட்டணி 37.9 சதவீதம் வாக்கும், ஜன்சுராஜ் கட்சி 9.7 சதவீதம் வாக்கும் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கட்சி அடிப்படையில்
கட்சிகள் அடிப்படையில் பாஜக 21.4 சதவீதம், ஆர்ஜேடி 23.3 சதவீதம், ஜேடியூ 17.6 சதவீதம், காங்கிரஸ் 8.7 சதவீதம் வாக்குகள் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளர் தேர்வில் தேஜஸ்வி யாதவுக்கு 32 சதவீதம் பேரும். நிதீஷ்குமாருக்கு 30 சதவீதம் பேரும், பிரசாந்த் கிஷோர் மற்றும் சிராஜ் பஸ்வானுக்கு தலா 8 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications