பீகார் தேர்தல் ரிசல்ட் 2020: என்டிஏ கூட்டணி அமோக வெற்றி - ஆட்சியை தக்கவைத்தது

பீகார் சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை 231 தொகுதிகளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாஜக 68 இடங்களில் வென்றுள்ளது. ஆர்ஜேடி 72 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் 40 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிற கட்சிகள் 32 இடங்களில் வென்றுள்ளன.

பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மொத்தம் 243 தொகுதிகளில் 3,733க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

 Bihar election result: NDA gallops ahead with lead in 126 seats 80% votes counted

38 மாவட்டங்களில் உள்ள 55 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்றது. 243 தொகுதிகளில் பதிவான வாக்குகளை முழுவதுமாக எண்ணி முடிக்க நள்ளிரவுக்கு மேல் ஆகும் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்ட நிலையில் முடிவுகள் பரபரப்பாக வெளியாகி வருகின்றன.

43 இடங்களில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும். காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய உடன் ஆர்ஜேடி கூட்டணி முன்னணியில் இருந்தாலும் முடிவுகள் மாறத் தொடங்கின. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி பெரும்பான்மையுடன் முன்னிலை பெற்றது.

இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 230 தொகுதிகளில் பாஜக 68 இடங்களில் வென்றுள்ளது. ஆர்ஜேடி 72இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் 41 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி 12 தொகுதிகளில் வென்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ஏஐஎம்ஐஎம் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. விகாஷீல் இன்சான் கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்துஸ்தானி அவா மோர்ச்சா 4 இடங்களில் வென்றுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது. சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 1 இடத்தில் வென்றுள்ளது. சுயேச்சை உறுப்பினர் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளார்.

பீகார் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆட்டம் பாட்டம் என அமர்களப்படுகிறது பீகார் மாநிலம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+