பீகார் 2-ம் கட்ட தேர்தல்: 94 தொகுதிகளில் காலை 9 மணி வரை 8.05% வாக்கு பதிவு
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் 2-ம் கட்டமாக 94 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காலை 9 மணிவரை மொத்தம் 8.05% வாக்குகள் பதிவாகி உள்ளன.
பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக அக்டோபர் 28-ல் 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து 94 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

2-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 2.85 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 1,50,33,034 பேர் ஆண் வாக்காளர்கள்;1,35,16,271 பேர் பெண் வாக்காளர்கள்.
தேர்தல் களத்தில் 1463 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 1316 பேர் ஆண்கள்; 146 பேர் பெண்கள். 2-ம் கட்ட வாக்குப் பதிவுக்காக 41,362 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
2-ம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக மகராஜ்கஞ்ச் தொகுதியில் 27 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். தாராலு தொகுதியில் 4 பேர் மட்டுமே வேட்பாளர்கள்.
2-ம் கட்ட தேர்தலில் பாஜக 46; ஜேடியூ 43 இடங்களில் போட்டியிடுகின்றன. ஆர்ஜேடி 56; காங்கிரஸ் 24 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சிபிஎம்எல் 6, சிபிஎம், சிபிஐ தலா 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. எல்.ஜே.பி. மொத்தம் 52 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் போட்டியிடும் ராகோபூர் தொகுதியிலும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேஜஸ்வியின் சகோதரர் தேஜ்பிரதாப் களம் காணும் ஹசன்பூர் தொகுதியிலும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
7 முறை வெற்றி பெற்ற பீகார் அமைச்சர் நந்த் கிஷோர் யாதவ், அமைச்சர்கள் ராம்சேவக் சிங், ராண ரந்தீர் சிங், ஆகியோரது தொகுதிகளிலும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications