குறுக்க இந்த கெளசிக் வந்தா? INDIA-க்கு நெருக்கடி கொடுக்கும் உதிரி கட்சிகள்! யார் யார் தெரியுமா?
பாட்னா: பீகார் மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதத்துக்கு மேல் நிலவிய தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கிறது. 243 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்படுகின்றன. முன்னணி நிலவரங்கள் வெளியாகியிருக்கு நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மட்டுமல்லாது தேசிய அளவில் கவனம் பெற்ற சில கட்சிகள் களத்தில் உள்ளது, இது காங்., - ஆர்ஜேடி கூட்டணிக்கு தான் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறை பீகாரில் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டத்தில் 121 தொகுதிகளில் 65.08% வாக்குக்கள் பதிவாகின. பின்னர் நவம்பர் 11-ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்டத்தில் 122 தொகுதிகளுக்கு 67.13% வாக்குப்பதிவு நடைபெற்றது.

மொத்தமாக இந்தத் தேர்தலில் 66.91% வாக்குகள் பதிவாகி உள்ளன. இதன் மூலம் பிஹார் வாக்காளர்கள் இந்த முறை தேர்தலில் தீவிர ஆர்வத்துடன் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு வெளியான கருத்துக் கணிப்புகள் (Exit Polls) NDAக்கு சாதகமாக உள்ளன..
பீகார் தேர்தல்
சுமார் 19 தேசிய ஊடகங்கள் NDA 150-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என கணித்தன. மெகா கூட்டணிக்கு 80 முதல் 90 இடங்கள் வரையிலான சீட்டுகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டது. ஆனாலும், பீகார் அரசியலில் கருத்துக் கணிப்புகள் பலமுறை தவறியுள்ளன என்பதால், உண்மையான முடிவு எப்படி இருக்கும் என்பதில் அரசியல் வட்டாரங்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருந்தன. வாக்கு எண்ணிக்கைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் கடுமையாக செய்யப்பட்டுள்ளன.
பீகார் வாக்கு எண்ணிக்கை
மாநிலம் முழுவதும் உள்ள 46 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மையத்திலும் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு, 24 மணி நேரமும் செயல்படும் CCTV கண்காணிப்பு, மத்திய தொழிற் பாதுகாப்புப் படை மற்றும் மாநில போலீஸ் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பாட்னாவில் உள்ள வாக்கு எண்ணும் மையம் இந்த முறை மிகவும் பரபரப்பாக உள்ளது. ஏனென்றால் அங்கு 14 தொகுதிகளுக்கான வாக்குகள் ஒரே இடத்தில் எண்ணப்படுகின்றன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய, மற்றும் காலை 9 மணிக்க்கெல்லாம் முன்னணி நிலவரம் தெரிய ஆரம்பித்தது. பிற்பகலியே பாஜக கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
கருத்துக்கணிப்பு
யார் பிகாரில் ஆட்சியை அமைக்கிறார்கள்? NDA மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளுமா? இல்லை RJD தலைமையிலான மெகா கூட்டணி இந்த முறை ஆட்சியை பிடிக்குமா? என்பதற்கான பதில் இன்னும் சில மணி நேரங்களிலேயே தெரிந்து விட்டது. இத்தேர்தலில் ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.
உதிரி கட்சிகள்
NDA-வில் பாஜக, ஜேடியூ, லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்), ராஷ்ட்ரியா லோக் மோர்ச்சா, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா போன்ற கட்சிகள் இணைந்திருந்தன/. மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதாதள் (RJD), காங்கிரஸ், விஐபி மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து கடுமையான போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடும் ஏமாற்றமே மிஞ்சியது. மேலும், பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ், ஓவைசியின் AIMIM, பஹுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி போன்ற பல கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு வாக்கு வங்கி பிளவிற்கு காரணமாகியுள்ளன. குறிப்பாக இக்கட்சிகள் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளையே குறிவைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications