பீகாரில் அதிக தொகுதிகளை வென்றாலும்.. வாக்கு சதவீதத்தில் பாஜக டாப் கிடையாது! இந்த இந்த கட்சிதான்
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி அதிக தொகுதிகளைில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இருப்பினும் வாக்கு சதவிகிதத்தில் பாஜகவோ, ஐக்கிய ஜனதா தளம் கட்சியோ முதலிடம் பிடிக்கவில்லை. எந்தெந்த கட்சிகள் எவ்வளவு வாக்குகளை பெற்றிருக்கிறது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
என்டிஏ கூட்டணி 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சியான மகாபந்தனத்திற்கு பெரும் தோல்வியைக் கொடுத்துள்ளது. இதில் பாரதிய ஜனதா கட்சி 89 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், அதிக வாக்குகள் பெற்ற கட்சிகளின் பட்டியலில் அதற்கு முதல் இடம் கிடைக்கவில்லை.

ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களுடன் பாஜகவுக்கு அடுத்தப்படியாக இருக்கிறது. எனினும், இந்த இரு கட்சிகளுமே வாக்கு சதவீதத்தில் முதல் இடத்தைப் பிடிக்கவில்லை.
இதற்கு அப்படியே நேரெதிராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெறும் 25 இடங்களை மட்டுமே பெற்றாலும், அனைத்து கட்சிகளை விடவும் அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி, 23 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி 20.8 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஐக்கிய ஜனதா தளம் 19.25 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. காங்கிரஸ் சுமார் 43 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. சதவிகிதமாக பார்த்தால் 8.71% ஆகும். சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 4.97 சதவீத வாக்குகளையும், சி.பி.ஐ. (எம்.எல்.)எல் கட்சி 2.84 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. மற்ற கட்சிகளை பொறுத்த அளவில்,
- அசாதுதின் ஓவைசியின் கட்சி - 1.85%
- பகுஜன் சமாஜ் கட்சி - 1.62%
- சிபிஐ - 0.74%
- சிபிஎம் - 0.60%
- ஆம் ஆத்மி 0.30%
வாக்குகளை பெற்றிருக்கின்றன. பீகார் தேர்தலில் காங்கிரஸ் கடும் தோல்வியடைந்திருக்கிறது. இந்நிலையில், இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, "ஆரம்பத்திலிருந்தே இந்த முடிவுகள் நியாயமற்றதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்று கூறியிருக்கிறார். அதேபோல காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன் கார்கே, "இந்த தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை முழுமையாக ஆராய்வோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications