பீகார் தேர்தல்.. நட்சத்திர தொகுதிகள் எவை? இந்த முறை வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்! விவரம்
பாட்னா: பாஜகவின் மூத்த தலைவர் சாம்ராட் சவுத்ரி தாராப்பூர் தொகுதியிலும், தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியிலும், தேஜ் பிரதாப் மகுவா தொகுதியிலும், பாஜகவின் மைதிலி தாக்கூர் அலினகர் தொகுதியிலும், ஐக்கிய ஜனதா தளத்தின் அனந்த் சிங் மொகாமா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக பார்க்கப்படுகின்றன.
பீகாரில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. நிதிஷ்குமார் முதலமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் இன்று மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

இதில் மேற்குறிப்பிட்ட 5 தொகுதிகள் முக்கியமான தொகுதிகளாக பார்க்கப்படுகிறது. தாராப்பூர் தொகுதியை பொறுத்தவரை, அது ஐக்கிய ஜனதா தளத்தின் கோட்டையாக இருக்கிறது. கடந்த 2010, 2015, 2020 மற்றும் 2021ல் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஐக்கிய ஜனதா தளம்தான் இங்கு வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட மேவா லால் சவுத்ரி, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளரான திவ்யா பிரகாஷை திவ்யா பிரகாஷை 7,225 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றகடித்திருந்தார்.
இடைத்தேர்தலில் ராஜீவ் குமார் சிங் 3,852 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், இந்த முறை பாஜகவுக்கு இந்த தொகுதியை கட்சி விட்டு கொடுத்திருக்கிறது.
ரகோபூர் தொகுதி
இந்த தொகுதியில் கடந்த 2 தேர்தல்களில் ராஷ்டிரிய ஜனதா தளம்தான் வெற்றி பெற்றிருக்கிறது. இரண்டு முறையும் தேஜஸ்வி யாதவ்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். 2015 சட்டமன்ற தேர்தலில் 22,733 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சதீஷ் குமார் யாதவை தோற்கடித்திருக்கிறார். அதேபோல 2020 தேர்தலில் 38,174 வாக்குகள் வித்தியாசத்தில் சதீஷ் குமாரை தோற்கடித்திருக்கிறார். இந்த முறையும் அவர் வெற்றிப்பெறுவார் என்று கணிப்புகள் கூறுகின்றன.
தேஜஸ்வியின் அண்ணன் களமிறங்கிய மகுவா தொகுதி
இந்த தொகுதியிலும் கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களில் ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு தேஜஸ்வியின் அண்ணன் தேஜ் பிரதாப் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். ஆனால் தற்போது இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். என இந்த முறை சுயேட்சையாக இந்த தொகுதியில் களமிறங்குகிறார். கடந்த 2020ம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் முகேஷ் குமார் ரௌஷன் களமிறகப்பட்டார். அவர் 13,770 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறையும் இக்கட்சி சார்பில் இவரே களமிறக்கப்பட்டிருக்கிறார்.
அலினகர் தொகுதி
இந்த தொகுதியில் கடந்த 2010 மற்றும் 2015ம் ஆண்டு தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட அப்துல் பாரி சித்திக்கி வெற்றி பெற்றார். ஆனால் 2020 தேர்தலில் விகாஸ்ஷீல் இன்சான் கட்சி வேட்பாளர் மிஷ்ரி லால் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார். இந்த முறை இக்கட்சி இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மொகாமா தொகுதி
இந்த தொகுதியில் கடந்த 2010ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் அனந்த் குமார் சிங், சூரஜ்பான் சிங்கை 23,439 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார். 2015ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் நீரஜ் குமாரை சுயேட்சையாக போட்டியிட்டு அனந்த் குமார் சிங் வீழ்த்தி வெற்றி பெற்றார். 2020ல் இதே அனந்த் குமார் சிங் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது மனைவி நீலம் தேவி ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications