பாட்னா: பீகாரில் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று இன்று இறுதிகட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், மாலை 6 மணி முதல் எக்ஸிட் போல்கள் வெளியாகி வருகின்றன.
243 சட்டசபை தொகுதிகளில் 122 இடங்களை வெல்லும் அணி ஆட்சி அமைக்கும். பாஜக-ஐக்கிய ஜனதாதளம் அடங்கிய ஆளும் கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்குமா, அல்லது ராஷ்டிரிய ஜனதாதளம் தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பல அமைப்புகள்-டிவி சேனல்கள் தனித்தனியாக மாலை 6 மணிக்கு மேல், எக்சிட் போல்கள் வெளியிட்டு வருகின்றன. அனைத்து எக்சிட் போல் முடிவுகளையும் உடனுக்குடன் அறிய, இந்த லைவ் பக்கத்துடன் இணைந்திருங்கள்.
Nov 07, 2020, 9:49 pm IST
நியூஸ் எக்ஸ் டிவி ரிசர்ச் எக்ஸிட் போல் முடிவுகள்:
ஜேடியூ-பாஜக அணிக்கு 110 முதல் 117 இடங்கள்.
ஆர்ஜேடி- காங். அணிக்கு 108 முதல் 123 இடங்கள்.
எல்ஜேபிக்கு 4 முதல் 10 இடங்கள்.
இதர கட்சிகளுக்கு 8 முதல் 23 இடங்கள்
Nov 07, 2020, 9:12 pm IST
இந்தியா டுடே ஆக்சிஸ் எக்ஸிட் போல் முடிவுகள்:
பாஜக ஜேடியூ கூட்டணிக்கு 61 முதல் 91 இடங்கள்.
ஆர்ஜேடி-காங். இடது கூட்டணிக்கு 139- 161 இடங்கள்.
எல்ஜேபி 3 - 5 இடங்கள்
Nov 07, 2020, 8:28 pm IST
டுடே சாணக்யா எக்ஸிட் போல்: ஆர்ஜேடி- காங். அணிக்கு 180; ஜேடியூ-பாஜகவுக்கு 55
Nov 07, 2020, 7:31 pm IST
TV9 BHARATVARSH எக்ஸிட் போல் முடிவுகள்: ஆர்ஜேடி-காங். அணிக்கு 115 முதல் 125; பாஜக அணிக்கு 110-120; எல்ஜேபி 3-5 இடங்கள் கிடைக்குமாம்.
Nov 07, 2020, 7:20 pm IST
இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இன்டியா எக்ஸிட் போல் முடிவு: குஜராத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 8 தொகுதிகளில் பாஜக 6 முதல் 7 தொகுதிகளில் வெல்லும்
Nov 07, 2020, 7:20 pm IST
இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இன்டியா எக்ஸிட் போல் முடிவு: உ.பி.யில் இடைத்தேர்தல் நடைபெற்ற 7-ல் பாஜக 5 முதல் 6 தொகுதிகளில் வெல்லும்;
Nov 07, 2020, 7:19 pm IST
உ,பி, குஜராத் இடைத்தேர்தல்களில் பாஜக வெல்லும்- எக்ஸிட் போல் முடிவுகள்
Nov 07, 2020, 6:53 pm IST
பீகாரில் ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு- ஏபிபி எக்சிட் போல்.
பாஜக கூட்டணி 104-128 இடங்களைப் பெறும்.
மகாகட்பந்தன் 108-131 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு- ஏபிபி எக்சிட் போல்.
Nov 07, 2020, 6:47 pm IST
பீகாரில் 118 முதல் 138 இடம் வரை காங். கூட்டணி கைப்பற்றும் - ரிபப்ளிக் டிவி.
பாஜக கூட்டணிக்கு 117 இடங்கள் வரை கிடைக்கலாம்.
லோக் ஜன சக்தி கட்சிக்கு 5 முதல் 8 இடம் வரை கிடைக்கலாம்.
Nov 07, 2020, 6:39 pm IST
சிவோட்டர்- டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகள்: ஆர்ஜேடி-காங். கூட்டணி 120 இடங்களில் வெல்லும்; ஜேடியூ-பாஜகவுக்கு 116 இடங்கள் கிடைக்கும்
Nov 07, 2020, 6:38 pm IST
ம.பி. இடைத் தேர்தல்: பாஜக 16 முதல் 18 வரை வெற்றி பெறலாம்.
காங்கிரஸ் 10-12 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு- இந்தியா டுடே எக்சிட் போல்.
Nov 07, 2020, 6:37 pm IST
சிவோட்டர்- டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகின
Nov 07, 2020, 6:31 pm IST
பீகார் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவில் 55.69%; 2-ம் கட்ட வாக்குப் பதிவில் 55.70%; 3-ம் கட்ட வாக்குப் பதிவில் 55.56% வாக்குகள் பதிவாகி உள்ளன.
Nov 07, 2020, 6:30 pm IST
2017-ல் ஆர்ஜேடி- ஜேடியூ- காங். கூட்டணி முறிந்தது. 71 இடங்களைப் பெற்ற ஜேடியூ, 53 இடங்களில் வென்ற பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.
Nov 07, 2020, 6:29 pm IST
பீகாரில் 2015 சட்டசபை தேர்தலில் 80 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக இருந்தது ஆர்ஜேடி
Nov 07, 2020, 6:27 pm IST
இன்னும் சற்று நேரத்தில் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாக தொடங்கும்
Nov 07, 2020, 6:27 pm IST
India Today-Axis My India எக்ஸிட் போல் முடிவுகள் இரவு 7 மணிக்கு வெளியாகிறது
Nov 07, 2020, 6:25 pm IST
வட இந்திய மாநிலங்களில் பீகாரில் மட்டும்தான் பாஜக தனிப்பெரும் கட்சியாக இதுவரை உருவெடுக்கவிலை.
Nov 07, 2020, 6:21 pm IST
2015 பீகார் சட்டசபை தேர்தலில் ஆர்ஜேடி-80; ஜேடியூ-71; காங். 27; பாஜக- 53; லோக் ஜனசக்தி 2; சிபிஐஎம்எல்-3; அவாமி மோர்ச்சா-1-ல் வென்றிருந்தன.
Nov 07, 2020, 6:16 pm IST
India Today Axis My India, ABP CVoter, Times Now CVoter ஆகியவை எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிடுகின்றன
Nov 07, 2020, 6:14 pm IST
பீகாரில் 2015 சட்டசபை தேர்தலின் போது எக்ஸிட் போல் முடிவுகள் அனைத்தையும் பொய்யாக்கி ஜேடியூ-ஆர்ஜேடி-காங். கூட்டணி ஆட்சி அமைந்தது
Nov 07, 2020, 6:12 pm IST
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவை ஜேடியூ-பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறியிருந்தன
Nov 07, 2020, 6:08 pm IST
ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியில் ஆர்ஜேடி- 144; காங். 70; இடதுசாரிகள் 19 இடங்களில் போட்டியிட்டன; ஜேடியூ- பாஜக கூட்டணியில் ஜேடியூ-115; பாஜக 110 இடங்களில் போட்டியிட்டன
Nov 07, 2020, 6:05 pm IST
243 சட்டசபை தொகுதிகளில் 122 இடங்களை வெல்லும் அணி ஆட்சி அமைக்கும்
Nov 07, 2020, 6:05 pm IST
பீகார் சட்டசபை தேர்தல் எகிஸ்ட் போல் - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன
Nov 07, 2020, 6:04 pm IST
பீகார் சட்டசபை தேர்தல் இறுதி கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்தது. நவம்பர் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
Nov 07, 2020, 5:49 pm IST
78 தொகுதிகளில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவில் பீகாரில் மாலை 5 மணி வரை 52.80 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது
Nov 07, 2020, 5:49 pm IST
பீகாரில் மாலை 5 மணி வரை 52.80% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
Nov 07, 2020, 5:41 pm IST
பீகாரில் பிற்பகல் 3 மணி வரை 45.90 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
Nov 07, 2020, 5:15 pm IST
பூர்னியாவில், வாக்குச்சாவடி அருகே வாக்குப்பதிவை நிறுத்த முயன்ற கும்பலால் பரபரப்பு.
கும்பலை விரட்ட காவல்துறையினர் வானை பார்த்து துப்பாக்கிச் சூடு.
READ MORE
5:43 PM, 27 Oct
காலை 7 மணிக்கு துவங்கும் பீகார் ஓட்டுப் பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும்,
5:43 PM, 27 Oct
முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் மாநில அமைச்சர்களில் 6 பேர் போட்டியிடுகிறார்கள்
5:43 PM, 27 Oct
முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி களத்தில் நிற்கும் மற்றொரு விஐபியாகும்
5:43 PM, 27 Oct
ஐக்கிய ஜனதாதளம் 35, பாஜக 29, ராஷ்டிரிய ஜனதாதளம் 42, எல்ஜேபி 41 இடங்களில் போட்டியிட உள்ளன
5:43 PM, 27 Oct
முதல் கட்ட தேர்தலுக்கு மொத்தம் 1066 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், அவர்களில் 114 பெண்கள்
5:44 PM, 27 Oct
முதல்கட்ட தேர்தலையொட்டி 30,000 பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்
6:08 AM, 28 Oct
பீகாரில் இன்று முதல்கட்ட தேர்தல் நடக்கிறது.
முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
6:26 AM, 28 Oct
2015-ல் 15 இடங்களில் வென்ற பாஜக தற்போது இதில் 8 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுகிறது- 4 தொகுதிகளை ஜேடியூவுக்கு ஒதுக்கி உள்ளது
6:26 AM, 28 Oct
2015-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இன்றைய தேர்தல் நடைபெறும் 71-ல் 15 இடங்கள்தான் கிடைத்திருந்தன
6:27 AM, 28 Oct
2015 தேர்தலில் இன்று தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் 54 இடங்களை ஆர்ஜேடி-ஜேடியூ-காங்கிரஸ் கைப்பற்றி இருந்தன
6:27 AM, 28 Oct
5 வேட்பாளர்கள் பரம ஏழைகள்- சொத்து எதுவும் இல்லாதவர்கள்.
6:27 AM, 28 Oct
இன்றைய தேர்தலை எதிர்கொண்டிருக்கும் 375 வேட்பாளர்கள் அதாவது 35% பேர் கோடீஸ்வரர்கள்
6:27 AM, 28 Oct
3 வேட்பாளர்கள் மீது பலாத்கார வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன
6:27 AM, 28 Oct
29 வேட்பாளர்கள் மீது பெண்ளுக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளன
6:27 AM, 28 Oct
244 வேட்பாளர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
6:27 AM, 28 Oct
முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் 328 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன
6:28 AM, 28 Oct
வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்- ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்
Voting for the first phase of the #BiharElections2020 will begin shortly. I appeal to people of the State to exercise their right to vote: Rashtriya Janata Dal leader Tejashwi Yadav pic.twitter.com/ocFvv0YptL
வாக்குப் பதிவுக்கு தயார் நிலையில் லகிசராய், கயா தொகுதி வாக்குச் சாவடிகள்
Voting for the first phase of #BiharElections to begin today; visuals from polling stations in Lakhisarai (pic 1 & 2) and Gaya (pic 3 & 4) pic.twitter.com/jpp8RNnhX5
வால்மீகி நகர், தர்பாங்காவில் காங்கிரஸ் மூத்த தலைவர் இன்று பிரசாரம்
6:28 AM, 28 Oct
தர்பங்கா, முசாபபூர் மற்றும் பாட்னாவில் பிரதமர் மோடி இன்று பிரசாரம்
6:29 AM, 28 Oct
வாக்குச் சாவடிகளில் கொரோனா பரவலை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள்
6:30 AM, 28 Oct
கொரோனா பரவல் தொடரும் நிலையில் முதல் முறையாக மாநில சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது
6:31 AM, 28 Oct
பீகாரில் நவம்பர் 3-ல் 2 வது கட்டமாக 94 தொகுதிகளிலும் நவம்பர் 7-ல் இறுதி கட்டமாக 78 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறும்.
6:32 AM, 28 Oct
இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும்
6:32 AM, 28 Oct
முதல் கட்ட வாக்களிப்பு விரைவில் தொடங்க உள்ளது, மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்: ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜாஷ்வி யாதவ் பேட்டி
Voting for the first phase of the #BiharElections2020 will begin shortly. I appeal to people of the State to exercise their right to vote: Rashtriya Janata Dal leader Tejashwi Yadav pic.twitter.com/ocFvv0YptL
தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுக்கு குட்பை சொல்லிவிட்டு ஜேடியூ, ஆர்ஜேடியுடன் கை கோர்க்கும்- ஓட்டுப் போடும் முன் சிராக் பாஸ்வான் ட்வீட்
6:55 AM, 28 Oct
முக கவசம் உள்ளிட்டவை அணிந்து கொரோனா பரவல் தடுப்பு உபகரணங்களுடன் கயா வாக்குச்சாவடியில் பணியாளர்கள்
Gaya: People deployed on polling duties seen wearing masks and gloves; sanitizers to be used during the voting that will begin shortly, which is first of its kind after #COVID19 pandemic. #BiharElectionspic.twitter.com/WuF6C0jx2h