Bihar Exit Poll: பீகாரில் பாஜக கூட்டணிக்கே ஆட்சி அரியணை.. காங்கிரஸ் - தேஜஸ்விக்கு பின்னடைவு.. டிவி ரிசர்ச் சர்வே
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு (Bihar Exit Poll Results 2025) முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், பாஜக - நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என டிவி ரிசர்ச் (DV Research) கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. 137 முதல் 152 தொகுதிகளில் இந்த கூட்டணி வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.
காங்கிரஸ் - தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 83 - 98 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 2 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல்
பீகாரில் முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரின் ஆட்சிக்காலம் வரும் 22 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே தேர்தல் ஆணையம் பீகார் சட்டசபைக்கான தேர்தல் தேதியினை அறிவித்தது. இதன்படி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில், முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மீதம் உள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
பாஜக கூட்டணியே வெற்றி பெறும்
இதில், டிவி ரிசர்ச் (DV Research) வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவில் நிதிஷ் குமார் - பாஜக கூட்டணியே வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் - தேஜஸ்வி யாதவ் கட்சி தோல்வியடையும் என கணித்துள்ளது. 137 முதல் 152 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெறும்.
காங்கிரஸ் - தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 83 -98 தொகுதிகளில் வெற்றி பெறும். பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 2 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. மற்றவை 1 -8 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என கணித்துள்ளது.
DV Research - கருத்துக்கணிப்பு முடிவுகள்:
* என்.டி.ஏ கூட்டணி: 137 - 152 தொகுதிகள்
* இந்தியா கூட்டணி: 83 - 98 தொகுதிகள்
* ஜன் சுராஜ்: 2 - 4 தொகுதிகள்
* மற்றவை: 1 - 8 தொகுதிகள்
வெள்ளிக்கிழமை தேர்தல் முடிவு
பீகாரில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 122 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும் என்பதால், எளிதில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதே இந்த கருத்துக்கணிப்பின் முடிவாக தெரிகிறது. இதனால் பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. எனினும் இது வெறும் கருத்துக்கணிப்பே என்பதால், வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஓட்டு எண்ணிக்கையிலேயே உண்மையாக யார் வெற்றி பெறுவார் என்பது தெரியவரும். பொறுத்திருந்து பார்க்கலாம்..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications