பீகார் எக்ஸிட் போல்.. என்டிஏ கூட்டணி ஆட்சியை காப்பாற்றும் மகளிர் வாக்குகள்.. பீப்பிள்ஸ் பல்ஸ் சர்வே
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் நடத்திய சர்வேயில் என்டிஏ கூட்டணிக்கு 66.8 சதவிகித மகளிரும், இந்தியா கூட்டணிக்கு 24.8 சதவிகித மகளிரும் ஆதரவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் என்டிஏ கூட்டணி 45.8 சதவிகித ஆண்களும், இந்தியா கூட்டணிக்கு 38.2 சதவிகித ஆண்களும் ஆதரவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 121 தொகுதிகளுக்கும், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 122 தொகுதிகளிலும் தேர்தல் நடந்தது. இன்று நடைபெற்ற 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி வரை 67.14 சதவிகிதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளது.

பீகார் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது. அங்கு ஜேடியு - பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும், ஆர்ஜேடி- காங்கிரஸின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி இருக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பெரும்பாலும் என்டிஏ கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
என்டிடிவி, சிஎன்என், ஏபிபி, people's insights, ஐஏஎன்எஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வேக்களும் என்டிஏ கூட்டணிக்கு சாதகமாகவே இருக்கின்றன. இந்த நிலையில் பீப்பிள்ஸ் பல்ஸ் என்ற கருத்துக்கணிப்பில் பீகார் தேர்தல் வாக்காளர்களில் ஆண்கள், பெண்களின் ஆதரவு யாருக்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி பீப்பிள்ஸ் பல்ஸ் சர்வேயில், என்டிஏ கூட்டணி 45.8 சதவிகித ஆண்களும், இந்தியா கூட்டணிக்கு 38.2 சதவிகித ஆண்களும் ஆதரவாக இருக்கின்றனர். அதேபோல் என்டிஏ கூட்டணிக்கு 66.8 சதவிகித மகளிரும், இந்தியா கூட்டணிக்கு 24.8 சதவிகித மகளிரும் ஆதரவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சிக்கு 9.7 சதவிகித ஆண்களும், 7 சதவிகித பெண்களும் ஆதரவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பாக ஆளும் நிதிஷ் குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி தரப்பில் மகளிருக்கு சுயதொழில் தொடங்குவதற்காக ரூ.10 ஆயிரம் கடன் அளிக்கப்பட்டது. அது பீகார் தேர்தலில் நன்றாக பிரதிபலித்துள்ளது. அதேபோல் மகளிர் உதவித் தொகை வாக்குறுதியும் வரவேற்பை பெற்றுள்ளதாக பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications