இந்தியாவிலேயே முதல் முறை..பீகார் பிசி, ஓபிசி, ஜாதி ரீதியாக எவ்வளவு தெரியுமா?அதிரடியாக டேட்டா ரிலீஸ்!
பாட்னா: நாட்டிலேயே சமீப காலங்களில் முதல் முறையாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை பீகார் மாநில அரசு இன்று வெளியிட்டுள்ளது.
நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சியில்தான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படியே இந்தியா முழுவதும் இன்றளவும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது.
நாடு விடுதலைக்குப் பின்னர் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 1980, 1990களில் இடஒதுக்கீடு விவகாரம் முழு வீச்சாக உயிர்த்தெழுந்த போது இந்த கோரிக்கை தீவிரமடைந்ததது.

இதன்பின்னர் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. ஆனால் அந்த புள்ளி விவரங்கள் முழுமையாக இல்லை; குழப்பமாக இருக்கிறது என தற்போதைய மத்தியில் ஆளும் பாஜக அரசு தெரிவித்து வருகிறது.
இந்த பின்னணியில் பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை நடத்தியது. அண்மைகாலங்களில் நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய முதல் மாநிலம் பீகார். ஆனால் இதற்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் சாதக, பாதகமான தீர்ப்புகள் வந்தன.
இந்நிலையில் தற்போது பீகார் அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் 63.14% : பீகார் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 13 கோடி. இதில் பிற்படுத்தப்பட்டோர் 27.13%; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01%; ஒட்டுமொத்தமாக பிற்படுத்தப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 63.14%; பொதுப் பிரிவினர் 15.52%; தாழ்த்தப்பட்ட மக்கள் 19.65%.; பழங்குடி இன மக்கள் 1.69%
மத ரீதியான கணக்கெடுப்பு விவரம்: இந்துக்கள் 81.99%; முஸ்லிம்கள் 17.7% ; கிறிஸ்தவர்கள் 0.05% ; சீக்கியர்கள் 0.01%; பவுத்தர்கள்- 0.08% ; இதர மதத்தினர் 0.12%
ஜாதி அடிப்படையில்.. : யாதவர்கள் (துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஜாதி) : 14%; குஷாவா 4.27% ; பிராமணர்கள் 3.65% ; முஷாகர்- 3% குர்மி (நிதிஷ்குமார் ஜாதி) 2.87% ; பூமிகார்- 2.86%
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications