வழி கேட்க சென்ற சிறுமி! கூட்டு பலாத்காரம் செய்து விற்ற கொடூரன்கள்.. இதில் போலீஸ் வேறு உடந்தையாம்
பாட்னா: பீகார் மாநிலத்தில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் மாநிலத்தையே அதிரச் செய்து உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மைனர் குழந்தைகளைக் குறி வைத்து நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் உயர்ந்து உள்ளன.
இந்தச் சூழலில் தான் பீகார் மாநிலத்தில் மைனர் சிறுமி ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

பீகார்
அந்த சிறுமியைப் பல மனித மிருகங்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், சிறுமியை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கடந்த வியாழக்கிழமை இரவு உத்தரப்பிரதேசத்தின் மாவ் மாவட்டத்தில் சோனி தேவி என்ற பெண்ணிடம் இருந்து சிறுமி ஒருவரை போலீசார் மீட்டு உள்ளனர். அப்போது தான் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வழி தவறி
கடந்த மாதம் பாதிக்கப்பட்ட அந்த மைனர் சிறுமி தனது சொந்த ஊரான மௌவில் இருந்து வழிதவறி வந்துள்ளார். அப்படியே தெரியாமல் மதுபானி மாவட்டத்தில் உள்ள ஜெய்நகர் நகரை அவர் அடைந்து உள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் அவர், அங்குள்ள அசோக் மார்க்கெட்டில் சுற்றித் திரிந்து உள்ளார். அப்போது அங்கிருந்த அர்ஜுன் யாதவ் என்பவரிடம் அவர் உதவி கேட்டுள்ளார்.

பலாத்காரம்
உதவி கேட்ட சிறுமியை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்த கொடூரன், தனது நண்பர்கள் மூவரை அழைத்துள்ளான். சென்றார். அந்த சிறுமியை கொடூரமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த அவர்கள், சிறுமியைப் பிடித்தும் வைத்துக் கொண்டு உள்ளனர். மேலும், மைனர் சிறுமியிடம் தொடர்ச்சியாக அத்துமீறி உள்ளனர். மேலும், சோனி தேவி என்ற பெண்ணிடம் சிறுமியை ரூ. 50 ஆயிரத்திற்கு விற்றுள்ளனர்.

மீட்பு
மறுபுறம் சிறுமி காணாமல் போனதால் பதற்றமடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். எங்கும் கிடைக்காததால் வேறு வழியின்றி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அந்த தகவலின் பெயரில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். கிடைத்த ரகசியத் தகவலின் பெயரில் சோனி தேவியின் வீட்டைச் சோதனை செய்தது, அங்கிருந்த சிறுமியை மீட்டனர்.

போலீசாருக்கு தொடர்பு
இந்தச் சம்பவத்தில் சோனி தேவி என்ற பெண் உட்பட மூன்று பேர் கைது செய்து உள்ளனர். இதில் கொடூரம் என்னவென்றால் காவலர் ஒருவருக்கும் இதில் தொடர்பாம். ஜெய்நகர் காவல் நிலையத்தில் டிரைவராக உள்ள காவலருக்கும் இதில் தொடர்பு உள்ளது. இப்போது தலைமறைவாக உள்ள அந்த நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

விபச்சார விடுதி
இப்போது கைது செய்யப்பட்டுள்ள சோனி தேவி என்பவர் அப்பகுதியில் விபசார விடுதி ஒன்றை நடத்தி வந்துள்ளார். அந்த பெண்ணிடம் தான் 50 ரூபாய்க்கு அந்த கொடூரன்கள் சிறுமியை விற்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்வோம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications