பீகாரில் ஆட்சியை இழக்கிறார் நிதிஷ்.. தனிப்பெரும் கட்சியாகிறது ராஷ்டிரிய ஜனதாதளம்- ஏபிபி எக்சிட் போல்
பாட்னா: பீகாரில் எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அங்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கடும் போட்டியாக இக்கூட்டணி உருவாகியுள்ளதாகவும் ஏபிபி டிவி சேனல் எக்ஸிட் போல் தெரிவிக்கிறது.
பீஹாரில் மூன்று கட்ட சட்டசபை தேர்தல்களில் இன்றுடன் நிறைவடைந்தன. வரும் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த நிலையில் பல்வேறு டிவி சேனல்கள் எக்ஸிட் போல் முடிவுகளை இன்று வெளியிடப்படுகின்றன.

இதில் ஏபிபி எக்ஸிட் போல் முடிவுகளும் ஒன்று ஆகும். இந்த டிவி சேனல் சி வோட்டர் அமைப்புடன் இணைந்து கருத்து கணிப்பை நடத்தியுள்ளது.
பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்டவை அடங்கிய மகாகத்பந்தன் என்ற மெகா கூட்டணி.. ஆளும் ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணிக்கு கடும் போட்டியாக உருவெடுக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
பாஜக கூட்டணி எளிதாக வென்று விடும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஏபிபி சேனலின் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளன.
இந்த கருத்துக் கணிப்பின்படி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி 104 முதல் 128 தொகுதிகள் வரை வெல்ல கூடும். எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணி 108 தொகுதிகள் முதல் 131 தொகுதிகள் வரை வெல்லக் கூடும்.
சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி கட்சி அதிகபட்சம் 3 தொகுதிகளை கைப்பற்ற பிறர் அதிகபட்சமாக 8 தொகுதிகள் வரை கைப்பற்றுவார்கள்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். அந்த கட்சி அதிகபட்சம் 81 முதல் 89 தொகுதிகள் வரை வெல்லக் கூடும். காங்கிரஸ் கட்சி 21 முதல் 29 தொகுதிகள் வரை வெல்ல கூடும். இடதுசாரிகள் அதிகபட்சமாக 13 தொகுதிகளை வெல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கூட்டணியில் பாஜக அதிகபட்சம் 66 முதல் 74 தொகுதிகள் வரை பெறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications