பீகார் எக்ஸிட் போல்.. மீண்டும் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும்.. தேஜஸ்வி நிலைமை என்ன? ABP கணிப்பு
பாட்னா: பீகார் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பில் என்டிஏ கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று ஏபிபி தெரிவித்துள்ளது. அதன்படி என்டிஏ கூட்டணிக்கு 147 முதல் 167 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும், இந்தியா கூட்டணிக்கு 90 முதல் 70 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 121 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது. இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 122 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வமாகத் தேர்தலில் வாக்களித்தனர். மாலை 5 மணி வரை 67.14 சதவிகிதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளது.

மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் கடைசி நேரத்தில் வாக்களித்து வருகின்றனர். பீகார் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது. அங்கு ஜேடியு - பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும், ஆர்ஜேடி- காங்கிரஸின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி இருக்கிறது.
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் ஏபிபி எக்ஸிட் போல் சர்வேவில் என்டிஏ கூட்டணியே பெரும்பான்மை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் என்டிஏ கூட்டணிக்கு 147 முதல் 167 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியா கூட்டணிக்கு 90 முதல் 70 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பாஜக 65 முதல் 73 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 67 முதல் 75 தொகுதிகளிலும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆர்ஜேடிக்கு 53 முதல் 58 தொகுதிகள் வரையும், காங்கிரஸ் கட்சிக்கு 10 முதல் 12 தொகுதிகள் வரையும், இடதுசாரிகளுக்கு 9 முதல் 14 தொகுதிகள் வரையும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications