பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 சீனியர்கள்.. ஸ்டார் பேச்சாளர் லிஸ்டிலே பெயர் இல்லை.. புறக்கணித்த பாஜக.. என்ன நடக்கிறது பீகாரில்?

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரைச் சேர்ந்த, பாஜக மூத்த தலைவர்களான, ஷானவாஸ் ஹுசைன் மற்றும் ராஜிவ் பிரதாப் ருடி ஆகியோர் பாஜகவின் நட்சத்திர பிரச்சாரகர்கள் லிஸ்டில் இடம் பெறவில்லை.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபை தொகுதியில், 122 தொகுதிகளில், ஐக்கிய ஜனதாதளம் கட்சியும், 121 தொகுதிகளில், கூட்டணி கட்சியான பாஜகவும் போட்டியிட உள்ளன. பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் 30 பேர் கொண்ட ஸ்டார் பேச்சாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில், பீகாரின் பாஜக முகங்களாக அறியப்படும், ஷானவாஸ் ஹுசைன் மற்றும் ராஜிவ் பிரதாப் ருடி ஆகியோர் பெயர்கள் இல்லை.

பீகார்: கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிரான வேட்புமனுத் தாக்கல்: 9 மூத்த பாஜக தலைவர்கள் டிஸ்மிஸ் பீகார்: கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிரான வேட்புமனுத் தாக்கல்: 9 மூத்த பாஜக தலைவர்கள் டிஸ்மிஸ்

வாஜ்பாய் காலத்து அமைச்சர்கள்

வாஜ்பாய் காலத்து அமைச்சர்கள்

இந்த இருவருமே, 1999ம் ஆண்டு, வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், மத்திய அமைச்சர்களாக பதவி வகித்த சீனியர்களாகும். அதேநேரம், 2014ம் ஆண்டுக்கு பிறகு கட்சியில் இணைந்த, எம்பிக்களான, ராம் கிரிபால் யாதவ், சுஷில் சிங் மற்றும் செட்டி பாஸ்வான் போன்றோர் பெயர்கள் அந்த பட்டியலில் உள்ளது. இதுதவிர பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா ஆகியோர் பெயர்களும் ஸ்டார் பிரச்சாரகர்கள் பட்டியலில் உள்ளது.

முதல்கட்டம்

முதல்கட்டம்

ஷானவாஸ் ஹுசைன் இது தொடர்பாக கருத்து கூறவில்லை. ராஜிவ் பிரதாப் ருடி, கூறுகையில், நான் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் அந்தஸ்தில்தான் இருக்கிறேன். புறக்கணிக்கப்பட்டதாக நினைக்கவில்லை. இது முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான லிஸ்ட்தான். எனது செல்வாக்கு கொண்ட பகுதிகள் 2வது கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில்தான் இருக்கின்றன. எனவே, அப்போது எனது பெயர் இணைக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றார். ஆனால் ராஜிவ் பிரதாப் ருடியை போல, ராஜ்புத் ஜாதியை சேர்ந்த மேலும் சில பாஜக தலைவர்கள் பெயர்கள் பிரச்சார லிஸ்டில் இருப்பது கவனிக்கத் தக்கதாக உள்ளது.

ஷானவாஸ் தேவையில்லையா

ஷானவாஸ் தேவையில்லையா

முஸ்லீம் மக்களின் நண்பன் என்பதை காண்பிக்க பாஜகவின் முகமாக போன தேர்தலில் ஷானவாஸ் பயன்படுத்தப்பட்டார். ஆனால், இப்போது இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார் என்பதால், கூட்டணிக்கு எதிராக முஸ்லீம்கள் பெரிய அதிருப்தியில் இருக்க மாட்டார்கள் என்பதால், ஷானவாஸ் ஹுசைன் பெரிதாக தேவைப்படமாட்டார், என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பீகாரின் முகம்

பீகாரின் முகம்

ஷானவாஸ் ஹுசைன் முதன்முதலில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் கிஷன்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் 1999ல் வென்றார், ஆனால் 2004 தேர்தலில் இங்கு தோற்றார். 2006ஆம் ஆண்டில் கணிசமான முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட தொகுதியான பாகல்பூரில் நடந்த இடைத்தேர்தலில் அவர் வென்றார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் அதே தொகுதியில் மீண்டும் வென்றார்.

பீகார் நிலவரம்

பீகார் நிலவரம்

இருப்பினும், 2014 க்குப் பிறகு, அவரது அரசியல் வாழ்க்கை கீழ்நோக்கிச் சென்றுவிட்டது. 2014ல் மோடி அலை இருந்தபோதிலும், ஷானவாஸ் தோல்வியடைந்தார், 2019ல் போட்டியிடாமல் தவிர்த்துவிட்டார். தற்போதைய பீகார் தேர்தலில் பாகல்பூர் டவுன், சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஷானவாசுக்கு வாய்ப்பு தந்ததாம் பாஜக. ஆனால் அதை அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

English summary
Two of the most well-known BJP faces in Bihar, Shahnawaz Hussain and Rajiv Pratap Rudi, are missing from the 30-member list of star campaigners that the party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X