மோடி சொத்து சேர்த்து வைத்திருக்கிறாரா? யாருக்காக..? பொங்கிய அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாட்னா: மோடியின் நேர்மை குறித்து ஒருவரும் கேள்வி எழுப்ப முடியாது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் காட்டமாக விமர்சித்துள்ளார்.
ரபேல் விவகாரம் மத்திய அரசுக்கு மீண்டும் கடும் பிரச்சனையாக மாறி வருகிறது. இந்த விவகாரத்தில் மோடியை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

அதற்கு பதிலடி தரும் விதமாகவே மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாட்னாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:எனது அரசியல் வாழ்க்கையில் அடிப்படையற்ற குற்றச் சாட்டுகளை நான் ஒரு போதும் கூறியதில்லை. வார்த்தைகளை உபயோகிப்பதிலும், கண்ணியத்தை காப்பதிலும் எப்போதும் கவனமாக இருப்பேன்.
அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டுமா?. மோடி சொத்துக்களை குவித்து வைத்துள்ளார் என்றால், அது யாருக்காக? அவரது மனைவி, குழந்தைகளுக்காகவா?
யாருக்காக அவற்றையெல்லாம் தரப் போகிறார்?. எதிர்க்கட்சிகளின் விஷமப் பிரசாரம் என்னை வெகுவாக காயப்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியை நீண்ட காலமாக தெரியும். எனவே, அவரின் நேர்மை, நோக்கம் குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது.
மக்களுக்கு தவறான தகவல்களை அளித்து அரசியல் செய்யும் வேலையை எதிர்க்கட்சிகள் கைவிடவேண்டும். பிரதமர் மோடி உள்பட பாஜகவைச் சேர்ந்த எந்தவொரு தலைவர் மீதும் ஊழல் கறை படிந்ததில்லை.
மூத்த தலைவர் அத்வானிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அப்போது தமது பதவியை அவர் ராஜினாமா செய்ததே அதற்கு உதாரணம் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications