பீகார் தேர்தல்.. லாலு கட்சி கூட்டணியில் குழப்பம்! தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் சலசலப்பு!
பாட்னா: பீகாரில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், என்டிஏ மற்றும் மகாபந்தன் கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீட்டில் மும்முரம் காட்டி வருகின்றன. ஆனால், மகாபந்தன் கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் தங்களுக்கு போதுமான தொகுதிகளை ஒதுக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்திருக்கின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) [CPI(ML)] கடந்த தேர்தலில், மகாபந்தன் கூட்டணியில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே இந்த முறையும் கட்சிக்கு 19 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதனை கட்சி ஏற்க மறுத்துள்ளது. கடந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸை விட சிறப்பான வெற்றியை பதிவு செய்திருப்பதாகவும், எனவே இந்தமுறை குறைந்தது 40 தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும் கட்சி தெரிவித்திருக்கிறது.

கடந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் 144 தொகுதிகளில் போட்டியிட்டு 75 இடங்களை வென்றது(52.08%). காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 இடங்களை மட்டுமே பெற்றது (27.14%). CPI(ML) 19 தொகுதிகளில் போட்டியிட்டு 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது (63.16%). வென்ற தொகுதிகள் குறைவாக இருப்பினும் வெற்றி விகிதம் அதிகமாக இருப்பதால் CPI(ML) கூடுதல் தொகுதிகளை கேட்கிறது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில்,
"கட்சியின் சுயமரியாதை சமரசம் செய்யப்படாது. மகாபந்தனின் வெற்றியை உறுதிப்படுத்த எங்களுக்கு நியாயமான இடப்பகிர்வு அவசியம். RJD இதை புரிந்துகொள்ள மறுப்பது ஆச்சரியமளிக்கிறது. RJD-யின் முடிவைப் பொறுத்து மகாபந்தனில் தொடர்வதா இல்லையா என்று நாங்கள் முடிவு செய்வோம்" என்று கூறியிருக்கிறார். 40 தொகுதிகள் என்பது அதிகபட்சமாகும். எனவே குறைந்தது 30 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டும் என CPI(ML) எதிர்பார்க்கிறது.
கூட்டணியில் CPI(ML)க்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படாமல் இருக்க காரணம், விகாஷீல் இன்சான் கட்சிக்கும் போதுமான தொகுதிகளை வழங்க வேண்டிய அவசியம் RJD-க்கு உள்ளது. விகாஷீல் இன்சான் கட்சிக்கு 12 இடங்கள் வழங்கப்பட்டன. இது 2020-ல் பாஜக-வுடன் கூட்டணியில் இருந்தபோது போட்டியிட்டதைவிட ஒரு இடம் அதிகம். இக்கட்சியின் தேசிய தலைவர் முகேஷ் சஹானி அதிக இடங்களைப் பெற முயற்சித்தார். செவ்வாய்க்கிழமை பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய சஹானி, இடப்பகிர்வு முடிவாகிவிட்டதாகவும், ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ளும் தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பாஜகவின் பீகார் தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான், மற்ற கட்சித் தலைவர்களுடன், டெல்லியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வானின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பிரதானுடன் பாஜகவின் பீகார் பொறுப்பாளர் வினோத் தாவ்டே மற்றும் மாநில அமைச்சர் மங்கள் பாண்டே ஆகியோர் உடனிருந்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications