Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எக்ஸாமே போயிடும்.. தேர்வு எழுத போன மாணவிகளுக்கு அதிர்ச்சி.. சாலையில் இறங்கி ஓடி.. பரிதாபம்

டிராபிக் ஜாம் குறித்து நாங்கள் பல புகார்களை கொடுத்திருக்கிறோம். ஆனாலும் சிக்கல் தொடர்கிறது என பள்ளி கல்வித்துறை தெரவித்துள்ளது

Subscribe to Oneindia Tamil

பாட்னா: சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த நிலையில் தேர்வுக்கு நேரமானதால் மாணவிகள் ஹால் டிக்கெட் மற்றும் பேனாக்களுடன் சாலையில் ஓடி சென்று பள்ளிக்கு சேர்ந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் பரவலாக பரவிய நிலையில் பலரும் போக்குவரத்து துறை மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சர்வதேச அளவல் அதிக போக்குவரத்து கொண்ட முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் புதிய சாலைகள், மேம்பாலங்கள், போக்குவரத்து சிக்னல்கள், போக்குவரத்து காவலர்கள் அமைக்கப்பட்டாலும் இந்த டிராபிக் மட்டும் குறைந்தபாடில்லை. பெருநகரங்களில் வசிப்போரின் அன்றாட நாட்களில் குறிப்பிட்ட சில நேரம் டிராபிக் ஜாமிலேயே கழிந்து விடுகிறது. வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவாறு சாலைகள் விரிவாக்கப்படவில்லை என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பீகாரில் இதே போன்று டிராபிக் ஜாமில் சிக்கிய மாணவிகள் சிலர் தேர்வுக்கு செல்ல முடியாமல் தவித்துள்ளனர். பீகாரின் கைமூர் மாவட்டத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தேர்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்திருக்கின்றன. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் தேர்வு நடைபெற்றுள்ளது. தேர்வில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்திருந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

ஆனால் கைமூரின் முக்கிய சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. சிலர் தங்களது பெற்றோருடன் பைக்கில் வந்தாலும், பலர் ஆட்டோவில்தான் வந்திருக்கின்றனர். காலை 8 மணியளவில் ஏற்பட்ட நெரிசல் 9 மணி ஆன பின்னரும் குறையவில்லை. இதனை எதிர்பார்க்காத மாணவிகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துள்ளனர். பின்னர், இதெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்து ஆட்டோவிலிருந்து இறங்கி ஓட தொடங்கியுள்ளனர். ஒன்றிரண்டு மாணவிகள் ஓட தொடங்கியதை பார்த்த சக மாணவிகளும் அவர்களுடன் சேர்ந்து ஓட தொடங்கியுள்ளனர்.

தேர்வு

தேர்வு

லாரி சந்துகளுக்கிடையேயும், கார்களுக்கு இடையேயும் புகுந்து புகுந்து ஒரு வழியாக 9.30 மணியளவில் பள்ளிக்கு வந்து சேர்ந்திருக்கின்றனர். மூச்சுவாங்க வியர்வையும், தலைவிரி கோலமாகவும் வந்த மாணவிகளை பார்த்து ஷாக்கான ஆசிரியர்கள் என்ன ஆச்சு என்று கேட்க மாணவிகள் டிராபிக் ஜாம் குறித்த விஷயத்தை விளக்கியுள்ளனர். ஓடாமல், டிராபிக் சரியாகிவிடும் என்று நினைத்து ஆட்டோவிலேயே இருந்த மாணவிகள் தேர்வுக்கு 30 நிமிடங்கள் வரை தாமதமாக வந்து சேர்ந்துள்ளனர். இதற்கிடையில் மாணவிகள் ஹால்டிக்கெட் மற்றும் பேனாவும் கையுமாக ஓடியதை பார்த்த சிலர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

கண்டனம்

கண்டனம்

மாணவிகளை இவ்வாறு ஓட வைத்ததற்காக பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், "இங்கு சாலை போக்குவரத்து மிகவும் மோசமாக இருக்கிறது. போதுமான விரிவாக்க பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல போக்குவரத்தை சரி செய்யவும் போதுமான அளவில் காவல்துறையினர் இல்லை. எனவேதான் எங்கள் மாணவிகள் இந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை விட மாணவிகளின் எண்ணிக்கைதான் அதிகம். மாணவிகளை போலவே மாணவர்களும் ஓடி வந்துதான் தேர்வு எழுதியுள்ளனர்" என்று கூறியுள்ளது.

காரணம்

காரணம்

அதேபோல கைமூர் மாவட்ட கல்வி அதிகாரி சுமன் ஷர்மா இது குறித்து கூறுகையில், "இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களை பார்த்து நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம். ஏற்கெனவே இந்த டிராபிக் ஜாம் குறித்து நாங்கள் பல புகார்களை கொடுத்திருக்கிறோம். ஆனாலும் சிக்கல் தொடர்கிறது. தற்போது சாலையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தான் டிராபிக் ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+