"தினசரி 30 பேர் பலாத்காரம் செய்வார்கள்! அம்மா பிளான் போட்டு தருவார்! அதிலும் என் அப்பா" சிறுமி கதறல்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்தில் மைனர் சிறுமி ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் கூட்டு பலாத்காரம் போன்ற சம்பவங்கள் சமீபத்தில் பல மடங்கு அதிகரித்து உள்ளது.

குறிப்பாக மைனர் சிறுமிகளைக் குறி வைத்து நடத்தப்படும் பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் நெஞ்சை உறையச் செய்பவையாக உள்ளது. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் பீகாரில் நடந்துள்ளது.

பீகார்

பீகார்

பீகார் மாநிலம் சமஸ்திபூரில் மைனர் பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார கொடுமைகள் வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அந்த மைனர் பெண் தனது தாய், தந்தை மற்றும் மாமா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். பணத்துக்காக அவரது குடும்பத்தினரே அவரை பலாத்காரம் செய்ய அனுமதித்ததாகச் சிறுமி கூறி உள்ளார். கிராமத்தின் தலைவர், போலீஸ் எஸ்ஐ உள்ளிட்டோரும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அந்த மைனர் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

 சொந்த குடும்பத்தினர்

சொந்த குடும்பத்தினர்

எல்லாவற்றையும் விட கொடூரம் என்னவென்றால், இந்த பலாத்கார சம்பவங்கள் அனைத்தும் அந்தச் சிறுமியின் தாய் மற்றும் தந்தைக்குத் தெரிந்தே நடந்துள்ளது. அதை அவர்கள் அனுமதித்து உள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், "தினமும் 20 முதல் 25 பேர் என்னை பலாத்காரம் செய்வார்கள். என் அம்மா வீட்டில் மது விற்பனை செய்கிறார். காவல்நிலையத்தில் உள்ள காவலர்களும் வீட்டிற்கு வந்து மது அருந்திவிட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

 போலீசாரும் கூட

போலீசாரும் கூட

எனக்கு வாழவே பிடிக்கவில்லை. வீட்டில் யாரும் எனக்கு உதவ மாட்டார்கள். இந்த வீடியோவை பார்க்கும் நண்பர்கள் தான் எனக்கு உதவ வேண்டும். இல்லையென்றால் அவர்கள் நிச்சயம் என்னைக் கொன்றுவிடுவார்கள். போலீசார் அதிகாரிகள் பலரும் என்னை பலாத்காரம் செய்துள்ளனர். மாவட்ட எஸ்ஐ மனோஜ் சிங் கூட என்னிடம் தவறாக நடந்து கொண்டார். இதன் காரணமாகவே போலீசுக்கு போகவில்லை.

 சொந்த அப்பா

சொந்த அப்பா

ஒரு கட்டத்தில் என்னால் சுத்தமாக முடியவில்லை. இதனால் நான் நேரடியாக கண்ட்ரோல் ரூமுக்கு ஃபோன் செய்து தகவல் கொடுத்துவிட்டேன். அப்போது போலீசார் வந்து எங்கள் வீட்டில் முழுமையாகச் சோதனை நடத்தினர். இருப்பினும், அப்போது போலீசாருக்கு பணத்தைக் கொடுத்துச் சமாளித்துவிட்டனர். இதனால் என் மீது கடும் கோபமடைந்த என் அப்பாவே என்னை பலாத்காரம் செய்தார்" என்று கண்ணீர் விட்டுள்ளார்.

கைது

கைது

இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் அடிப்படையில் சிறுமியின் தாய், தந்தை உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்தச் சிறுமியின் தந்தை எலக்ட்ரானிக் கருவி கடை வைத்துள்ளார். அவரது அம்மா வீட்டில் முறைகேடாக மது விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 போலீஸ் தரப்பு

போலீஸ் தரப்பு

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மைனர் பெண் ஒருவர் அவரது குடும்பத்தினரே அவரை பலாத்காரம் செய்ய அனுமதித்ததாக கூறி உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். அந்த வீடியோவின் அடிப்படையில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து 3 பேரைக் கைது செய்தனர்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+