Exploring Bihar: பீகார்: நேற்று, இன்று, நாளை.. இந்தியாவின் முதல் பேரரசை உருவாக்கிய மௌரியர்களின் வரலாறு!
பாட்னா: பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே அம்மாநிலம் கவனம் பெற்றிருக்கிறது. அரசியலை தாண்டி, பீகாரின் வரலாறு உள்ளிட்ட விஷயங்களை 'ஒன் இந்தியா தமிழ்' தொகுத்து வழங்கி வருகிறது. இந்த தொகுப்பில் இதற்கு முன்னர் பீகாரில் பௌத்த மதத்தின் வளர்ச்சி பற்றி பேசியிருந்தோம். இன்று, இந்தியாவின் முதல் பேரரசான 'மௌரிய பேரரசு' பீகாரில் தோன்றியதை பற்றி பார்ப்போம்.
மகத அரச காலத்தில் சமணமும், பௌத்தமும் தொன்றியிருந்தது. இந்த அரசின் முக்கிய மன்னர்களாக பிம்பிசாரர் மற்றும் அவரது மகன் அஜாதசத்ரு ஆகியோர் இருந்தனர்.

சிசுநாக வம்சம்
இவர்களுக்கு பிறகு சிசுநாக வம்சம் உருவானது. இந்த வம்சம் உருவானது சுவாரசியமான கதை. அதாவது, அஜாதசத்ருவின் மகன் நாகதாசகாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தர்தான் சிசுநாகர். இவர் மக்கள் கிளர்ச்சியின் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார். ஆட்சியை கொடுத்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் இல்லையா! எனவே, மகதத்தின் நீண்டகால போட்டியாளரான அவந்தி அரசை தோற்கடித்து, சிசுநாக வம்சத்தை இவர் உருவாக்கினார்.
மக்கள் அதிருப்தி
என்னதான் இவர் தனி வம்சமாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டாலும், இவரும் மகத அரசர்களில் ஒருவர்தான். அப்புறம் என்ன காலம் சுழன்றது, இவரை தோற்கடிக்க இன்னொரு அரசன் வந்தான். அவன் பெயர்தான் மகாபத்ம நந்தர். இவர் ஆட்சியில் பெரிய ராணுவ பலம் இருந்தது. ஆனால் எப்பேற்பட்ட அரசாக இருந்தாலும் அது தொடர்ந்து நீடிக்கும்போது மக்களிடையே அதிருப்தி இருக்கும். அந்த வகையில் மகத மன்னரான மகாபத்ம நந்தர் மீதும் மக்களுக்கு அதிருப்தி இருந்தது.
மகதத்தின் வீழ்ச்சி
மட்டுமல்லாது வட மாநிலங்களின் பல பகுதியில் பிராமண ஆதிக்கம் நிலவி வந்த நிலையில், மகத ஆட்சியில் மட்டும் ஜைன/சமண மற்றும் பௌத்தம் செழித்து வளர்ந்திருந்து. எனவே பீகாரிலும் பிராமணர் தலைமையிலான ஆட்சியை அமல்படுத்த பலரும் முயன்றனர். அவர்களில் மிக முக்கியமானவர் சாணக்கியர்.
மகாபத்ம நந்தரின் மகன் தன நந்தர் காலத்தில்தான் சாணக்கியர் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. மகத அரசர்கள் சத்திரிய வம்சத்தை சேர்ந்தவர். இவர்கள் அரசர்களாக இருப்பதை வைதீக மதத்தினர் ஏற்கவில்லை. எனவே இந்த அரசை வீழ்த்த சாணக்கியர் திட்டமிட்டார். இதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அது நெப்போலியன் இந்தியா மீது படையெடுத்த காலம். எனவே, இந்திய மன்னர்கள் இணைந்து இந்த படையெடுப்பை எதிர்க்க வேண்டும் என்று சாணக்கியர், தன நந்தனை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
நெப்போலியன்
இயல்பாகவே, மற்ற அரசர்கள் பிராமணர்களின் ஆதரவுடன் இருப்பதால் தன நந்தன், மற்றவர்களுடன் இணைவதை விரும்பவில்லை. அதே நேரத்தில் தன நந்தனுக்கு, சாணக்கியரின் ஐடியா பிடிக்கவில்லை. எனவே அவரை அவமானப்படுத்தி அரண்மனையிலிருந்து வெளியேற்றியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சாணக்கியர், மகத வம்சத்தை துடைத்தெறிவேன் என்று சபதமேற்கிறார். அவருடைய சபதத்தை நிறைவேற்றியவர்தான் சந்திரகுப்த மௌரியர்.
ஏற்கெனவெ மகத வம்சத்திற்கு மக்களிடையே இருந்த அதிருப்தி, தன நந்தரின் ஆட்சி அதிகார போதாமை ஆகியவை சாணக்கியருக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது.
சந்திரகுப்த மௌரியர்
சந்திரகுப்த மௌரியர் யார்? ஏன் அவரை சாணக்கியர் தேர்ந்தெடுத்தார் என்பது குறித்து இரு வேறு கருத்துக்கள் இருக்கிறது. ஒன்று சந்திரகுப்தர் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்று சொல்கிறது. இன்னொரு அவர் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறுகிறது. எப்படி இருப்பினும் சந்திரகுப்தருக்கு போர் தந்திரம் உட்பட அனைத்தையும் கற்றுக்கொடுத்த சாணக்கியர், தன நந்தருக்கு எதிராக மக்களை காக்க வந்தவர் சந்திரகுப்தர் என்கிற தோற்றத்தை மக்களிடையே உருவாக்கினார்.
மௌரிய பேரரசு
சந்திரகுப்தர் உருவாக்கிய படையில் கிரேக்க மற்றும் பிற கூலிப்படை வீரர்களும் இருந்ததாக சில வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. இந்த படை மகத நாட்டின் தலைநகரான பாடாலிபுரத்தை நேரடியாக தாக்கவில்லை. மாறாக எல்லை பகுதியை தாக்கி கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடைய செய்தன. அனைத்துப் பக்கங்களிலும் நந்தப் பேரரசு பலவீனமடைந்த பிறகு, சந்திரகுப்தர் இறுதியாக நந்தர்களின் தலைநகரான பாடலிபுத்திரத்தை முற்றுகையிட்டு வீழ்த்தினார். இந்த போரில் தன நந்தர் கொல்லப்பட்டதாக பௌத்த நூல்கள் கூறுகின்றன. இப்படித்தான் இந்தியாவின் முதல் பேரரசு பீகாரில் உருவானது.












Click it and Unblock the Notifications