Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பிரபலம்" யார்னு பாருங்க.. சோற்றில் "பெற்ற பிள்ளையை" மறைத்த பெண் தலைவி... இப்படி அசிங்கப்பட்டுட்டாரே

Subscribe to Oneindia Tamil

பாட்னா: அப்பதான் மேயராக பதவியேற்றார் ராக்கி.. ஒருசில நாட்களிலேயே அந்த பதவியில் இருந்து, இப்போது தூக்கியடிக்கப்பட்டுள்ளார் இந்த அரசியல் பெண் பிரபலம்.. என்ன நடந்தது?
பீகார் மாநிலம் சாப்ரா மேயர் பதவியில் இருப்பவர் ராக்கி குப்தா.. இவர் ஒரு பிரபலமான மாடல்.. தன்னுடைய பாப்புலாரிட்டியை வைத்தே, அரசியலுக்குள்ளும் நுழைந்தவர்.. அத்துடன், நடந்து முடிந்த மேயர் பதவியிலும் போட்டியிட்டார் ராக்கி குப்தா.. அபார வெற்றியும் பெற்றார்.

சிக்கிய பெண்: ஆனாலும், பதவியேற்று கொஞ்ச நாளிலேயே, பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணம், ராக்கி தாக்கல் செய்த பிரமாண பத்திரம்தான்..

Famous Personality Mother of 3 Rakhi Gupta removed from Bihar Chhapra Mayor post

தேர்தல் சமயங்களில், அரசியல்வாதிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது வழக்கமான ஒன்றுதான்.. அந்தவகையில், ராக்கியும் பிரமாண தாக்கல் செய்துள்ளார். அந்த பிரதாண பத்திரத்தில், தனக்கு 2 குழந்தைகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.. ஆனால், ராக்கிக்கு உண்மையிலேயே 3 குழந்தைகள் இருக்கிறார்களாம்.. பதவி வெறியால், பொய் சொல்லி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

என்ன காரணம்: முனிசிபல் சட்டத்தின் விதிகளின்படி, வேட்பு மனு பரிசீலனையின்போது, 2 குழந்தைகளுக்கு மேல் உள்ள வேட்பாளர், தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிடுவார். அந்தவகையில், 3 குழந்தைகள் தனக்கு இருந்தும், ஒரு குழந்தையை அப்படியே சோற்றில் பூசணிக்காயை போல மறைத்துவிட்டார் ராக்கி. ஆனால், அவரது இந்த பிரமாண பத்திரம் சரியாக ஆய்வு செய்யப்படாமல், அப்படியே ஓகே செய்யப்பட்டுவிட்டது.

Famous Personality Mother of 3 Rakhi Gupta removed from Bihar Chhapra Mayor post

3 குழந்தைகள்: இதற்கு பிறகுதான், ராக்கிக்கு 3 குழந்தைகள் இருபப்து தெரியவந்துள்ளது. அதுவும் அந்த குழந்தைகளுக்கு வயசு என்ன தெரியுமா? முதல் குழந்தை ஷ்ரியன்ஷ்-க்கு 14 வயதாகிறது.. ஷிவான்ஷி-க்கு 9 வயதாகிறது.. ஷ்ரிஷ்-க்கு 6 வயதாகிறது.. இந்த விஷயத்தை எதிர்க்கட்சியினர் மோப்பம் பிடித்துவிட்டு, விவகாரத்தையும் கிளப்பினார்கள்.. கமிஷனுக்கு புகார்களை ஆதாரத்துடன் அனுப்பினார்கள்.

தன்னுடைய பிரமாண பத்திரத்தில், ராக்கி ஏன் குழந்தைகளை மறைத்தார்? என்று வாதிட்டு, தேர்தலையும் ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆவேசத்துடன் கோரிக்கை வைத்தன. எதிர்க்கட்சிகள் பிரச்சனையை பெரிதாக்கிய நிலையிலும்கூட, தனக்கு 2 குழந்தைகள் மட்டுமே இருக்கிறார்கள் என்று வாதிட்டார், பெற்ற தாய் ராக்கி

அதிரடி: இந்த கேஸ் கடந்த மாத காலமாகவே தொடர்ந்து நடந்து வந்தது.. ஆனால், தன் குழந்தைகள் விஷயத்தில் ராக்கியின் பொய்கள் அதிகமாயின.. இதற்கு பிறகு, பொய்யான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த குற்றச்சாட்டின் பேரில், ராக்கி மீது தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சரண் மாவட்ட நீதிபதிக்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பதவியை நிரப்புவதற்காக முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் புதிய தேர்தல் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Famous Personality Mother of 3 Rakhi Gupta removed from Bihar Chhapra Mayor post

பீகார் முனிசிபல் சட்டம் 2007-ன்பிரிவு 18(1)ன்கீழ் குப்தாவை தகுதி நீக்கம் செய்துள்ளது ஆணையம். இப்போதைக்கு, ராக்கி பதவி நீக்கம் செய்யப்பட்டதால், மேயர் பதவி காலியாகி உள்ளதாம்.. இப்படியும் ஒரு தாய் - அதுவும் நம்ம இந்தியாவில்????

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+