நிதிஷின் எழுச்சி.. வீணாக போன தேஜஸ்வியின் முயற்சி! பீகார் தேர்தல் எக்ஸிட் போல் சொல்லும் 5 பாயிண்டுகள்
பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் இரு கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இப்போது அங்கு எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகிறது. அதில் பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகளில் என்டிஏ கூட்டணியே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸிட் போல் முடிவுகள் உணர்த்தும் 5 விஷயங்கள் குறித்து நாம் பார்க்கலாம்!
பீகார் மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அங்குப் பெரும்பாலான தொகுதிகளில் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றது. எங்கும் பெரியளவில் மோதல்கள் நடக்காமலிருந்தது. அங்குப் பொதுமக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர்.

5 பாயிண்டுகள்
இதற்கிடையே தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், இப்போது எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இதுவரை பல பீகார் எக்ஸிட் போல் முடிவுகள் வந்துவிட்ட நிலையில், அதில் சில முக்கிய டிரெண்டை நம்மால் கவனிக்க முடிகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
1. முதலில் கிட்டத்தட்ட எல்லா எக்ஸிட் போல் முடிவுகளுமே பீகாரில் என்டிஏ கூட்டணி வெல்லும் எனத் தெரிவித்துள்ளது. இந்த முறை பீகாரில் மோடியைக் காட்டிலும் அமித் ஷாவே முன்னிட்டு பிரச்சாரம் செய்தார். பாஜக சார்பில் கடைசி நேரத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட இறங்கி பிரச்சாரம் செய்தார். இவை எல்லாம் சேர்த்து என்டிஏ கூட்டணி கடைசிக்கட்ட பூஸ்ட்டை கொடுத்துள்ளதாகவே தெரிகிறது.
நிதிஷின் எழுச்சி
2. இதில் இரண்டாவது முக்கியமான விஷயம் நிதிஷ் குமாரின் எழுச்சியைச் சொல்லலாம். கடந்த 2020 பீகார் தேர்தலில் நிதிஷ் இதே என்டிஏ கூட்டணியில் தான் போட்டியிட்டார். இருப்பினும், அந்த முறை அவரால் 43 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அந்தத் தேர்தலில் நிதிஷ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் சிராக் பாஸ்வான் கட்சி போட்டியிட்டதே நிதிஷ் குமார் கட்சியால் பெரியளவில் வெல்ல முடியாமல் போனதற்குப் பிரதானக் காரணமாக இருந்தது.
இருப்பினும், இந்த முறை நிலைமை மாறியிருந்தது. சிராக் பாஸ்வான் பீகாரில் என்டிஏ கூட்டணியிலேயே போட்டியிட்டார். இதனால் என்டிஏ வாக்குகள் பிரிந்து போகாமல் இருக்கிறது. அதன் விளைவாகவே நிதிஷ் கட்சி இந்த முறை கூடுதல் இடங்களை வெல்லும் எனக் கிட்டத்தட்ட எல்லா சர்வேகளிலும் கூறப்பட்டுள்ளது. நிதிஷ் கட்சி இந்த முறை 60- 80 இடங்களில் வெல்லும் என்றே பெரும்பாலான சர்வேக்களில் கூறப்பட்டுள்ளது. நிதிஷின் இந்த எழுச்சியும் என்டிஏவுக்கு கை கொடுக்கிறது.
வீண் முயற்சி
3. அடுத்தது ஆர்ஜேடி- காங்கிரஸ் தோல்வி.. கடந்த 4 பீகார் தேர்தல்களிலும் பீகார் மக்களைத் தங்களுக்கு வாக்களிக்க வைக்க ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணியால் முடியவில்லை. இந்த முறை மக்கள் ஆதரவை, குறிப்பாகப் பெண்கள் ஆதரவைப் பெற, தேஜஸ்வி யாதவ் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தார். இந்தியா கூட்டணி வென்றால் ஓராண்டிற்கான உதவித்தொகை ரூ.30,000 ஜனவரியில் வழங்கப்படும் எனக் கூட அறிவித்துப் பார்த்தார். இருப்பினும், எக்ஸிட் போல் முடிவுகளை வைத்துப் பார்த்தால் அது மக்களிடையே ஒர்க் அவுட் ஆகவில்லை என்றே தெரிகிறது.
ராகுல் பிரச்சாரம் வேலைக்கு ஆகல
4. ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு பிரச்சாரமும் கூட வேலைக்கு ஆகவில்லை என்றே தெரிகிறது. பீகார் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி வாக்கு திருட்டு தொடர்பாகச் சில பகீர் கருத்துகளை முன்வைத்திருந்தார். மேலும், வாக்கு திருட்டை முன்வைத்தே பீகாரில் அவர் மிகப் பெரிய நடைப்பயணத்தையும் கூட நடத்தினார். அதில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நடைப்பயணத்தால் காங்கிரஸுக்கு எழுச்சி ஏற்பட்டுள்ளதாகச் சொல்லியே அக்கட்சி அதிக இடங்களைக் கேட்டு வாங்கியது. இருப்பினும், காங்கிரஸ் தலைவர்கள் சொன்னது போலப் பெரிய எழுச்சி எல்லாம் ஏற்படவில்லை என்றே எக்ஸிட் போல் முடிவுகள் கூறுகிறது. காங்கிரஸ் 61 இடங்களில் போட்டியிட்ட நிலையில், பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் அவர்கள் 20 இடங்களையே தாண்ட மாட்டார்கள் என்றே கூறியுள்ளது.
பிரசாந்த் கிஷோர்
5. அடுத்து பிரசாந்த் கிஷோர் பேக்டர் தேர்தல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர் ஜன் சூராஜ் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து பீகார் தேர்தலில் போட்டியிட்டார். கூட்டணி இல்லாமல் அவர் தனித்தே போட்டியிட்டார். இருப்பினும், இந்த முறை அவருக்கு பீகார் மக்கள் பெரியளவில் ஆதரவளிக்கவில்லை. பெரும்பாலான எக்ஸிட் போல்களில் அவர் ஒற்றை இலக்கிலேயே வெல்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications