ஆர்எஸ்எஸ், மோடி சித்தாந்தங்களுக்கு எதிராக பேசினாலே வழக்குகள் பாய்கின்றன.! ராகுல் பேட்டி
பாட்னா: பீகார் மாநில துணை முதல்வரான சுஷில் குமார் மோடி சார்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாட்னா நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், அரசியலமைப்பை காப்பாற்றும் தனது போராட்டம் தொடரும் என்றார்.
முன்னதாக மக்களவை தேர்தல் சமயத்தில் ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் அப்போது பிரச்சார கூட்டம் ஒன்றில் தமக்கு ஒரு கேள்வி எழுகிறது. திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் மோடி என்ற பெயர் ஏன் இருக்கிறது என வினவினார்.

வங்கி கடன் வாங்கி விட்டு வெளிநாடுகளில் பதுங்கிய நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி இன்னும் எத்தனை மோடிக்கள் வருவார்களோ, யாருக்கு தெரியும் என்று பிரச்சாரத்தின் போது தெரிவித்தார் ராகுலின் இந்த பேச்சால் பெரும் சர்ச்சை வெடித்தது ஏனெனில் பீகார் மாநிலத்தில் மோடி என்ற பெரிய சமூக மக்கள் வசித்து வருகின்றனர்
அவர்கள் மத்தியில் ராகுலின் பேச்சு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது இந்நிலையில் அம்மாநில துணை முதல்வராக உள்ள சுஷில் குமார் மோடியும் அந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ராகுலின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்
அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்களில் பேசிய பிரதமர் மோடி ராகுல் தன்னை அவமதிப்பாக கூறி கொண்டு ஒட்டுமொத்த மோடி சமூகத்தை கேவலமாக பேசி விட்டார் என குற்றம்சாட்டினார்
இந்நிலையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி தாக்கல் செய்த அவதூறு வழக்கு தொடர்ந்தார் இவ்வழக்கை விசாரித்த பாட்னா நீதிமன்றம் ராகுல் காந்தி நேரில் ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்பியது
இதனையடுத்து அவதூறு வழக்கில் நேரில் ஆஜரான ராகுல் காந்தி சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது இதனையடுத்து அந்த மனுவை விசாரித்த பாட்னா நீதிமன்றம் ராகுலுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது
ஜாமின் கிடைத்த பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் நரேந்திர மோடியின் சித்தாந்தத்திற்கு எதிராக யார் நிற்கிறார்களோ அவர்கள் மீது நீதிமன்ற வழக்குகள் பாய்கின்றன. ஜனநாயகத்தின் குரல்வளையை அவர்களால் நெறிக்க முடியாது. மக்களுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்
அரசியல் ரீதியாக எதிர்ப்பு தெரிவிப்பவர்களை நீதிமன்றத்துக்கு இழுத்து அவர்களை மிரட்டும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் என சாடினார். எனது போராட்டம் அரசியலமைப்பை காப்பாற்றும் குறிக்கோளை கொண்டதாகும். மேலும் ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காக துணை நிற்பது தான் என்றார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்











Click it and Unblock the Notifications