Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

15 மாதங்கள் சிறை! லாலுவின் எமர்ஜென்சி அனுபவம்! ஆனால், மோடி போல் இல்லையாம்?

Subscribe to Oneindia Tamil

பாட்னா: எமர்ஜெனியில் தன்னை இந்திரா காந்தி சிறையில் அடைத்தார் என்றும் ஆனால், அவர் தங்களை துஷ்பிரயோகம் செய்யவில்லை என்றும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாந்த் யாதவ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எமெர்ஜென்சியை கொண்டுவந்து சரியாக 49 ஆண்டுகள் முடிந்துள்ளது. இந்த நெருக்கடி நிலையின்போது நாட்டில் பல வலுக்கட்டாயமாகத் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூன் 25, 1975 அன்று, மாநில உரிமைகளை ஒடுக்கும் வகையில் குடியரசுத் தலைவர் எமர்ஜென்சியை நள்ளிரவு அறிவித்தார்.

Lalu Prasad Yadav Bihar

அதன் பின்னால் இந்திரா காந்தியின் அதிகார துஷ்பிரயோகம் ஒளிந்துகொண்டிருந்தது. கிட்டத்தட்ட நாட்டில் 21 மாதங்கள் அவசரக்கால கறுப்புச் சட்டம் நடைமுறையிலிருந்தது.

352வது பிரிவு என்ன சொல்கிறது என்றால், போர் காலத்தில் அல்லது அந்நிய படையெடுப்பின்போதோ அப்படி இல்லை எனில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கும் போதோ, இறையாண்மைக்கும் தீங்கு செய்யும்போதோ இந்த அவசர நிலையைப் பிரகடனம் செய்யும் அதிகாரத்தைக் குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது.

ஆனால், அப்படி எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாதபோது இந்திரா காந்தி தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள எமெர்ஜென்சியை பயன்படுத்தினார். நெருக்கடி நிலையை இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு வரலாறு என எதிர்க்கட்சிகள் வர்ணித்து வருகின்றன. பத்திரிகைகள் தணிக்கைக்கு பிறகே செய்திகளை வெளியிடலாம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 'துக்ளக்' பத்திரிகை அட்டைப் படத்தில் எந்தத் தலைப்பையும் போடாமல் கறுப்பு அட்டையை வெளியிட்டது. 'முரசொலி'யில் கிண்டலாக சில தலைப்புகளை வைத்து அதன் ஆசிரியர் மு. கருணாநிதி செய்திகளை வெளியிட்டார்.

இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் எமெர்ஜென்சியில் கைதானார். அவருடன் சிட்டிபாபு உட்பட அவரது கட்சியினர் சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் எமர்ஜென்சி காலத்தில் தான் அனுபவித்த சிறைத் தண்டனைப் பற்றிய நினைவுகளைப் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

அதில், "இந்திரா காந்தி எங்களைச் சிறையில் அடைத்தார், ஆனால் எங்களை துஷ்பிரயோகம் செய்யவில்லை" என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி 18ஆவது மக்களவைக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசும் போது, 'எதிர்க்கட்சிகள் இன்னும் எமர்ஜென்சி மனநிலையால் உந்தப்பட்டு அரசியல் செய்துவருகிறார்கள்' என்று சாடி இருந்தார். மேலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது உரையில் எமர்ஜென்சியைக் கண்டித்திருந்தார். இதனால்தான் இப்போது எமர்ஜென்சி பற்றிய விவாதம் நாடு முழுவதும் நடந்து வருகின்றது.

இதனிடையே ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் 1975 முதல் 77 ஆண்டு வரையிலான நினைவு கூர்ந்துள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில் அவரும் பத்திரிகையாளர் நளின் வர்மாவும் இணைந்து எழுதிய "The Sangh Silence in 1975" என்ற கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.

"அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் திணிக்கப்பட்ட அவசரநிலைக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல ஜெயப்பிரகாஷ் நாராயண் அமைத்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக நான் இருந்தேன். நான் 15 மாதங்களுக்கும் மேலாக மிசா கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன்.

Lalu Prasad Yadav Bihar

இன்று எமர்ஜென்சி பற்றிப் பல பாஜக அமைச்சர்கள் பேசுவது எனக்கும் எனது நண்பர்களுக்கும் தெரியாது. மோடியும் நட்டாவும் இன்று எமர்ஜென்சி பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், அன்றைக்கு இவர்களைப் பற்றி நாங்கள் கேள்விப்படவே இல்லை.

இந்திரா காந்தி எங்களைப் போன்ற பலரைச் சிறையில் அடைத்தார். ஆனால் அவர் எங்களை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யவில்லை. அவரோ அவரது அமைச்சர்களோ எங்களை 'தேச விரோதிகள்' என்றோ அல்லது 'தேசபக்தியே இல்லாதவர்கள்' என்றோ அழைக்கவில்லை.

நமது அரசியலமைப்பின் சிற்பியான பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவைக் கெடுக்கும் வன்முறையாளர்களை அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. 1975 கொண்டு வரப்பட்ட எமர்ஜென்சி என்பது நமது ஜனநாயகத்தின் மீது படிந்த ஒரு கறைதான். ஆனால் 2024 இல் எதிர்க்கட்சிகளைக் கொஞ்சம் கூட மதிக்காமல் நடந்துகொள்பவர்கள் யார் என்பதையும் மறந்துவிடக் கூடாது" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி விதித்த அவசரநிலை மார்ச் 21, 1977 இல் நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தலில், இந்திரா காந்தி ஆட்சி தோல்வியைத் தழுவியது. அடுத்து ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. இந்திரா காந்தியும் அவரது மகன் சஞ்சய் காந்தியும் ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தனர்.

ஜனதா கூட்டணி ஆட்சி வெகு விரைவில் கவிழ்ந்தது. 1979 இல் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் 353 இடங்களில் வெற்றி பெற்று மறுபடியும் ஆட்சிக்கு வந்தது. இந்திரா மீண்டும் பிரதமரானார். 1984 இல் அவர் கொல்லப்படும் வரை பதவியிலிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+