தட்டிக்கேட்க ஆள் இல்லை.. தேசிய அளவில் புயலை கிளப்பும்.. பீகாரில் வேலையை காட்டும் பிரசாந்த் கிஷோர்!
ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிராக புதிய தலைவரை உருவாக்கும் பணியில் இறங்கி உள்ளார் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்.
பாட்னா: ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிராக புதிய தலைவரை உருவாக்கும் பணியில் இறங்கி உள்ளார் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் கடந்த மாதம் தனது கட்சியில் இருந்து துணை தலைவர் பிரசாந்த் கிஷோரை நீக்கினார். இந்த சட்டத்தை ஜேடியூ துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வந்தார்.
ஆனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க உத்தரவு பிறப்பித்தார். இதனால் கட்சிக்குள் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார்.

என்ன நீக்கம்
இந்த நிலையில் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் முதல்முறையாக பிரசாந்த் கிஷோர் வெளிப்படையாக பேச தொடங்கி உள்ளார். பீகாரில் தற்போது அவர் பாட் பீகார் கி என்ற தலைப்பில் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. பீகார் சட்டசபை தேர்தலுக்கு முன் மிகப்பெரிய இளைஞர் படையை உருவாக்க அவர் முடிவெடுத்துள்ளார். இதற்காக பீகார் முழுக்க அவர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

என்ன பேட்டி
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், நான் புதிதாக எந்த கட்சியிலும் சேர மாட்டேன். அதேபோல் எந்த கூட்டணியிலும் நான் சேர மாட்டேன். நான் தனியாக பணியாற்ற போகிறேன். அடுத்த 100 நாட்களுக்கு நான் பீகார் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். மாநிலம் முழுக்க இருக்கும் இளைஞர்களை இணைக்க உள்ளேன். பீகாருக்கு புதிய தலைவர் வேண்டும் என்று நம்பும் மக்களை ஒன்றாக இணைத்து மாற்றம் கொண்டு வர போகிறேன்.

பீகார் முன்னேற்றம்
கடந்த 15 வருடத்தில் பீகார் முன்னேறி இருக்கிறது. ஆனால் மற்ற மாநிலங்கள் முன்னேறிய அளவிற்கு பீகார் வேகமாக முன்னேறவில்லை. 2005ல் பீகார் வறுமையான மாநிலமாக இருந்தது. இப்போதும் பீகார் மிகவும் வறுமையான மாநிலமாகவே இருக்கிறது. நிதிஷ் குமாரை கேள்வி கேட்க ஆள் இல்லை. அவரின் அரசியல் மாடலை கேள்வி கேட்க யாரும் இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

வளர்ச்சி
லாலு பிரசாத் ஆட்சியின் கீழ் பீகாரில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி ஏற்பட்டது. அதேபோல் நிதிஷ் குமார் ஆட்சியின் கீழும் சில வளர்ச்சி திட்டங்கள் வந்தது. ஆனால் பீகார் இதனால் ஒரே அடியாக முன்னேறவில்லை. குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா , கர்நாடகா , தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெரிய அளவில் முன்னேறி உள்ளது. அந்த அளவிற்கு பீகார் முன்னேறவில்லை. இதற்கு நிதிஷ் குமார்தான் காரணம்.

மோசம்
நிதிஷ் குமார் தன்னுடைய கட்சியின் கொள்கையில் இருந்து விலகிவிட்டார். காந்திய கொள்கையுடன்தான் நிதிஷ் குமார் இருந்தார். ஆனால் இப்போது அவரே காந்தியை கொன்றவர்களை ஆதரிக்கும் பாஜகவுடன் சேர்ந்துள்ளார். கோட்ஸேவிற்கு ஆதரவு தெரிவிப்பவர்களைத்தான் பாஜகவும் ஆதரிக்கிறது. அவரை நான் இப்போதும் மதிக்கிறேன். என்னை கட்சிக்குள் வைத்து இருப்பதும், நீக்குவதும் அவருடைய நோக்கம், என்று பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications