என்னாச்சு.. கதறி அழுதபடி.. துப்பட்டாவில் கண்ணை துடைத்து.. வீட்டை விட்டு வெளியேறிய லாலு மருமகள்
கண்ணீரை துடைத்தபடி வீட்டை விட்டு வெளியேறுகிறார் லாலு மருமகள்
பாட்னா: என்னாச்சுன்னே தெரியல.. லாலு பிரசாத் மருமகள் கதறி அழுதவாறும்.. துப்பட்டாவில் கண்ணீரை துடைத்துக் கொண்டும்.. வீட்டை விட்டு வெளியே வரும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத். இவரது மூத்த மகன் தேஜ் பிரதாப்புக்கும், ராஷ்டிரிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ சந்திரகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் போன வருடம் மே மாதம் கல்யாணம் நடந்தது.

தம்பதிக்குள் தகராறு அடிக்கடி வந்துவிட்டது.. இதற்கு ஐஸ்வர்யா சொன்ன காரணம், தன் கணவர் போதைக்கு அடிமையானவர் என்பதுதான். அது மட்டுமில்லை.. அடிக்கடி தன்னை சிவனின் அவதாரம் என்று சொல்லி கொள்வாராம்.
இவர்களுக்குள் தகராறு அதிகமாக, கல்யாணம் ஆன 6 மாசத்திலேயே டைவர்ஸ் கேட்டு கோர்ட் வாசலையும் தேஜ் பிரதாப் மிதிக்க நேர்ந்தது. எனினும் 2 பேரையும் சமாதானம் செய்து ஒன்றாக வாழ வைக்க இரு வீட்டு பெரியவர்களும் முயற்சி மேற்கொண்டனர்.
இந்நிலையில் மருமகள் ஐஸ்வர்யா ராய், அழுதுகொண்டே லாலு வீட்டில் இருந்து வெளியேறும் போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஐஸ்வர்யா கையில் சூட்கேஸ் உள்ளது. கதறி அழுதபடி, துப்பட்டாவில் கண்ணீரை துடைத்தபடியும் வெளியே வருகிறார். இந்த போட்டோதான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேஜ் பிரதாப் மீது ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் அளித்த புகாரில் கணவர் தேஜ் பிரதாப் போதைக்கு அடிமையானவர் என்றும் தன்னை சிவனின் அவதாரம் என்று கூறிக்கொண்டு பலவகை போதை பொருட்களை உட்கொள்வதாகவும் வேதனையுடன் தெரிவித்திருந்தார். ஏற்கனவே உடம்பு சரியில்லாமல் சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கும் லாலுவுக்கு இது அடுத்த சோதனையாக எழுந்துள்ளது!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications