திடீரென ஓடிவந்து ராகுல் காந்திக்கு முத்தமிட்ட நபர்! பீகார் பைக் பேரணியில் சலசலப்பு! வீடியோவை பாருங்க

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த (SIR) நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து பீகார் இன்று ராகுல் காந்தி பைக் பேரணி நடத்தினார். அதில் பாதுகாப்புகளை மீறி இளைஞர் ஒருவர் ஓடி வந்து ராகுல் காந்திக்கு முத்தமிட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் இந்த சம்பவம் நடந்ததால் பாதுகாப்பு காவலர்களால் இளைஞரை தடுக்க முடியவில்லை. பின்னர் அந்த இளைஞரை அவர்கள் எச்சரித்து அனுப்பியிருக்கின்றனர்.

Rahul Gandhi security Bihar

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு எதிராக ராகுல் காந்தி 'வாக்காளர் அதிகாரம்' என்கிற பெயரில் பேரணியை நடத்தி வருகிறார். பீகார் முழுக்க பயணிக்கும் அவர் மக்களை களத்தில் சென்று சந்தித்து, தேர்தல் ஆணையம் மீதான தனது குற்றச்சாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

இன்று பூர்ணியாவில் பைக் பேரணி நடைபெற்றது. இதில் ராகுலுடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். ராகுல் காந்தி ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டினார். அவருக்குப் பின்னால் பீகார் பிரதேச காங்கிரஸ் கமிட்டி (BPCC) தலைவர் ராஜேஷ் குமார் அமர்ந்திருந்தார். தேஜஸ்வி யாதவும் தனி பைக்கில் இந்த யாத்திரையில் இணைந்திருந்தார்.

யாத்திரையின் போது, பாதுகாப்பு வளையத்தை மீறி ஓடி வந்த ஒருவர் ராகுல் காந்தியை கன்னத்தில் முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ராகுல் காந்தி தனது பைக்கை ஒரு கணம் நிறுத்தினார். உடனே, தேஜஸ்வி யாதவ் பயணித்த பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இறங்கி வந்து, அந்த நபரைப் பிடித்து, அவரை அடித்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ராகுல் காந்தியுடன் பயணித்த மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) பாதுகாப்புப் படையினர், அவரது பாதுகாப்பு வளையத்தை மேலும் பலப்படுத்தினர். இந்தச் சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

சமூக வலைத்தளப் பயனர்கள் இந்த நிகழ்வில் பல பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு பயனர், "ராகுல் காந்தியின் பைக் பேரணியின் போது பல பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன. மக்கள் அவரை எளிதில் நெருங்கினர். கூட்டத்தை நிர்வகிக்க போதுமான பாதுகாப்புப் படையினர் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான இந்த 'வாக்காளர் அதிகாரம் யாத்திரை' 16 நாள் நடக்கிறது. இன்று இத எட்டாவது நாளாக நடைபெற்றது. செப்டம்பர் 1-ம் தேதி பாட்னாவில் யாத்திரை நிறைவடைகிறது. இந்த யாத்திரை மாநிலத்தின் 20 மாவட்டங்களில் 1,300 கி.மீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடக்கும். விரைவில் பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த யாத்திரை மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.

பீகாரை பொறுத்தவரை தற்போது, ஐக்கிய தனதா தளம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. இக்கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதலமைச்சராக இருக்கிறார். இக்கட்சி தேசிய அளவில், பாஜக தலைமையிலான 'தேசிய ஜனநாயக கூட்டணியில்' இருக்கிறது. பீகார் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் ஜெயித்தால் அவர் தொடர்ந்து 10வது முறையாக முதலமைச்சராக பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+