அரசு பள்ளி ஆண் ஆசிரியருக்கு மகப்பேறு விடுப்பு.. என்னாது வாத்தியார் கர்ப்பமா? அதெப்படி திமிங்கலம்?
பாட்னா: மகப்பேறு விடுப்பில் உள்ள ஆண் ஆசிரியர் குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.. இந்த ஆசிரியர் மகப்பேறு லீவுக்கு விண்ணப்பித்து, அதற்கு அதிகாரிகளும் அனுமதி தந்தது எப்படி? என்றும் கேள்வி எழுந்துள்ளது.
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் மஹுவா பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த பள்ளியில் ஜிதேந்திர குமார் சிங் என்பவர் பணியாற்றி வருகிறார்.. இவர் தற்போது விடுப்பில் இருந்து வருவதாக தெரிகிறது.

கர்ப்பிணிகள்: ஆனால், குழந்தை பெறும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பில், இவர் ஒரு வாரம் விடுமுறையில் இருந்துள்ளார். ஆன்லைனில் விடுப்புக்கு விண்ணப்பிக்கும் அரசு ஆசிரியர்களுக்காக அமைக்கப்பட்ட போர்ட்டலை பயன்படுத்தி இந்த விடுப்பினை ஜிதேந்திர குமார் எடுத்துள்ளார்..
அதாவது, மகப்பேறு விடுப்பு கேட்டு, ஆன்லைனில் இவர் விண்ணப்பிக்கவும், இதற்கு மேல் அதிகாரிகளும் அனுமதி தந்திருக்கிறார்கள். ஆண் ஆசிரியருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கியதற்கான ஸ்கிரீன் ஷாட்டை, சக ஆசிரியர்களே சோஷியல் மீடியாவில் பகிர்ந்துவிட்டார்கள். இதற்கான ஸ்கிரீன் ஷாட்தான், சோஷியல மீடியாவில் வேகமாக பரவி பலருக்கும் திகைப்பை தந்து வருகிறது.
தொழில்நுட்ப பிழை: ஆனால், இது ஒரு தொழில்நுட்பப் பிழை என்று அதிகாரிகள் காரணம் கூறுகிறார்கள். தொழில்நுட்ப பிழையானது சரி செய்யப்படும் என்று மஹுவா தொகுதி கல்வி அதிகாரி அர்ச்சனா குமாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விடுப்பு கேட்டு தவறான ஆப்ஷனை ஆசிரியர் தேர்வு செய்துள்ளார். அந்த டெக்னிக்கல் பிரச்சனையும் சரி செய்யப்பட்டு விட்டது. பெண்களுக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, ஆண்களுக்கு பிறந்த குழந்தைகளை உடனிருந்து பராமரிக்க விடுப்பு (Paternity Leave) வழங்கப்படுகிறது. ஆண்கள் கூட தங்கள் பிறந்த குழந்தைகளைக் கவனிக்க 'பித்ரித்வா அவகாஷ்' (தந்தையர் விடுப்பு) எடுக்கிறார்கள்.. அதனோடு மகப்பேறு விடுப்பும் இதில் குழம்பியுள்ளது.
மாதாந்திர விடுப்பு: வழக்கமான மாதாந்திர விடுப்புகளை எடுத்தாலும், அவர்கள் கணக்கில் உள்ள விடுப்புகள் கழிக்கப்படுவதாக சில ஆசிரியர்கள் புகார் அளித்துள்ளனர். அது பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.. எனினும், ஆண் ஆசிரியருக்கு எப்படி மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்து, பீகார் கல்வித்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன... அத்துடன், சோஷியல் மீடியாவில் இது பல்வேறு விவாதங்களை உருவாக்கி வருகிறது. சிலர் இதுகுறித்து கிண்டலாகவும் பதிவிட்டு வருகிறார்கள்..












Click it and Unblock the Notifications