பீகார் முதல்வர் பதவி வேண்டாம்.. ராஜ்யசபா எம்பியாகும் நிதிஷ் குமார்.. இன்று மனு.. எல்லாம் மகனுக்காக!
பாட்னா: பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் - பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் நிதிஷ் குமார் இன்று ராஜ்யசபா எம்பி வேட்பாளராக வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.. இதன்மூலம் அவர் தனது முதல்வர் பதவியை பாஜகவிடம் விட்டு கொடுத்துவிட்டு ராஜ்யசபா எம்பியாக தொடர உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் பாஜக 89 தொகுதகிளிலும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி 85 இடங்களிலும் வெற்றி பெற்றது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனாலும் கூட தற்போது பாஜக கூட்டணிக்கு மொத்தம் 202 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
ராஜ்யசபா தேர்தல்
இந்நிலையில் தான் பீகார் முதல்வர் பதவியை கைவிட்டுவிட்டு நிதிஷ் குமார் ராஜ்யசபா எம்பியாவதாக முக்கிய தகவல்கள் வெளியானது. பீகாரில் 5 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவுக்கு வர உள்ளது. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளில் இருந்து தலா 2 பேர் ராஜ்யசபா எம்பியாக முடியும்.
இதில் பாஜக சார்பில் தேசிய தலைவர் நிதின் நபின், சிவேஷ் குமார் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட்டுள்ளனர். அதேபோல் நிதிஷ் குமார் கட்சி சார்பில் 2 பேர் வேட்பாளராக போட்டியிட உள்ளனர். இதில் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் ராம்நாத் தாகூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் இன்னொரு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
நிதிஷ் குமார் வேட்புமனு
அந்த இடத்தில் தான் நிதிஷ் குமார் போட்டியிட உள்ளார். இன்று வேட்புமனுத்தாக்கல் முடியும் நிலையில் காலை 11.30 மணிக்கு நிதிஷ் குமார் ராஜ்யசபா எம்பியாக வேட்புமனுத்தாக்கல் செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உடனிருந்தனர். இதன்மூலம் நிதிஷ் குமார் ராஜ்யசபா எம்பி ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் மாற்றம்
இதனால் அவரால் முதல்வராக நீடிக்க முடியாது. அவர் கண்டிப்பாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த வகையில் பார்த்தால் பாஜகவை சேர்ந்த ஒருவர் முதல்வராக பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது பாஜகவுக்கு 89 எம்எல்ஏக்கள் உள்ளன. மேலும் இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது.
பின்னணி என்ன?
நிதிஷ் குமாருக்கு தற்போது 75 வயது ஆகிறது. இதனால் தனக்கு பிறகு கட்சியை தனது வாரிசு வழிநடத்த வேண்டும் என்று நிதிஷ் குமார் விரும்புவதாக கூறப்படுகிறது. நிதிஷ் குமாருக்கு , நிஷாந்த் குமார் என்ற மகன் உள்ளார். அவருக்கு வயது 45 வயது ஆகிறது. இவர் தற்போது வரை நேரடியாக அரசியலில் ஈடுபடவில்லை.
ஆனால் தேர்தல் பணிகளை மட்டும் மேற்கொண்டு வருகிறார். கட்சியில் எந்த பொறுப்பிலும் அவர் இல்லை. இருப்பினும் கடந்த ஆண்டு இறுதயிலேயே விரைவில் நிதி்ஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் அரசியலில் என்ட்ரி கொடுப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் நிஷாந்த் குமாரை பீகாரில் தனது அரசியல் வாரிசாக்க நிதிஷ் குமார் விரும்புகிறார்.
இதனால் நேரடியாக கட்சியில் பொறுப்பு கொடுத்தால் யாரும் மதிக்க மாட்டார்கள். அதேபோல் நேரடியாக அவரை முதல்வராக்கினால் மக்களும், சொந்த கட்சியினரும், கூட்டணியில் உள்ள கட்சியினரும் ஏற்க மாட்டார்கள். இதனால், தான் ராஜ்யசபா எம்பியாகிவிட்டு பாஜகவுக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுத்து மகன் நிஷாந்த் குமாரை துணை முதல்வராக்க நிதிஷ் குமார் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications