நிதிஷ் குமாருக்கு கல்தாவா? முதல்வர் யார்.. சஸ்பென்ஸ் வைக்கும் பாஜக.. அதிரும் பீகார்
பாட்னா: பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக மீண்டும் நிதிஷ் குமாரே பதவி ஏற்பார் என ஒருபுறம் அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூறி வருகிறார்கள். அதே சமயம் கூட்டணியில் உள்ள பாஜகவோ இன்னும் அது குறித்து ஒரு கருத்து கூட சொல்லாமல் இருப்பதால் பீகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்பாரா என்பதில் இழுபறி நீடித்துள்ளது.
நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 202 தொகுதிகளை பிடித்து இமாலய வெற்றி பெற்றது. இதனால் ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல்
பீகாரில் தற்போது முதல்வராக இருந்து வரும் நிதிஷ் குமாரே மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்றே கூறப்படுகிறது. எனினும் இந்த முறை தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ள பாஜக நிதிஷ் குமார் தான் முதல்வர் என்பதை சொல்லாமலேயே இருந்து வருகிறது. தேர்தலை சந்திக்கும் முன்பு கூட யார் முதல்வர் வேட்பாளர் என்பதை என்.டி.ஏ கூட்டணி அறிவிக்காமலேயே போட்டியிட்டது.
பீகாரில் 25 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்தவர் நிதிஷ் குமார். தற்போதும் தொடர்ந்து 19 ஆண்டுகளாக அவரே அம்மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறார். (இடையில் ஒரு ஆண்டை தவிர). இந்த நிலையில் தான் மீண்டும் பாஜக கூட்டணி மற்றும் நிதிஷ் குமார் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனால் நிதிஷ் குமாரே முதல்வர் பதவி வகிப்பார் என்று கூறப்படுகிறது.
மீண்டும் முதல்வராகும் நிதிஷ் குமார்
எனினும் பாஜக இது பற்றி ஒன்றும் சொல்லாமல் இருப்பதால் இழுபறி ஏற்பட்டு இருக்கிறது. இதற்கிடையே தான் மத்திய உள்துறை அமைச்சரை ஜேபி நட்டா இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் பீகார் தேர்தல் முடிவுகள் பற்றியும், பீகாரில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகள், முக்கிய தலைவர்கள் நிதிஷ் குமாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார்கள். இதுபோல் லோக்ஜனசக்தி கட்சி தலைவர் சிராஜ் பஸ்வான் நிதிஷ்குமாரை சந்தித்து பேசியுள்ளார். கூட்டணி கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பலரும் நிதிஷ் குமார் முதல்வராக தொடருவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
மவுனம் காக்கும் பாஜக
இந்த நிலையில் தான் பாட்னாவில் அமைச்சரவை கூட உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு முதல்வர் நிதிஷ் குமார் ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். இதனை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சி தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய ஜனதா தள கட்சியினர் நிதிஷ் குமார் தான் மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்று கூறி வருகிறார்கள். ஆனால் கலந்து ஆலோசித்த பிறகு தான் பீகார் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் மீண்டும் நிதிஷ் குமாரே பீகார் முதல்வராக வருவாரா என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலில் தலா 101 தொகுதிகளில் பாஜக, நிதிஷ் குமாரின் ஜேடியூ கட்சிகள் போட்டியிட்டன. இதில் பாஜக 89 தொகுதிகளிலும், 85 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
-
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications