பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம்
பாட்னா: பீகார் முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் இன்று ராஜ்யசபா தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார். இதன்மூலம் தேசிய அரசியலுக்கு செல்லும் நிதிஷ் குமார் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
பீகார் முதல்வராக இருப்பவர் நிதிஷ் குமார். தற்போது 10 வது முறையாக முதல்வராக அவர் உள்ளார். இந்நிலையில் தான் நிதிஷ் குமார் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். பீகாரில் காலியாக உள்ள 5 ராஜ்யசபா இடங்களுக்கு இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற உள்ளது.

இந்நிலையில் தான் நிதிஷ் குமார் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார். இதனை நிதிஷ் குமார் உறுதி செய்துள்ளார்.
நிதிஷ் குமார் விளக்கம்
இதுபற்றி நிதிஷ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், ''கடந்த 20 ஆண்டுகளாக பீகார் மக்கள் தொடர்ந்து என் மீது நம்பிக்கையும், ஆதரவும் வழங்கினீர்கள். இந்த ஆதரவில் தான் பீகாருக்கும், அனைவருக்கும் முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருகிறோம்.
மக்களுக்கு நன்றி
உங்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவு தான் இன்றைய பீகாரின் வளர்ச்சிக்கு புதிய பரிமாணத்தை வழங்கி உள்ளது. இதற்காக உங்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
சின்ன வயது ஆசை
எனது நாடாளுமன்ற பயணத்தின் தொடக்கத்திலேய பீகார் சட்டசபையின் இரு சபைகளிலும், நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை என் இதயத்தில் இருந்தது. இந்த விருப்பத்தை நிறைவேற்ற இந்த முறை நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக விரும்புகிறேன்.
பீகார் மக்களுடனான எனது உறவு எதிர்காலத்திலும் தொடரும். வளர்ந்த பீகாரை உருவாக்க உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான எனது உறுதிப்பாடு உறுதியாக இருக்கும் என்பதை நேர்மையுடன் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.
புதிய அரசாங்கத்துக்கு எனது முழு ஒத்துழைப்பும், வழிக்காட்டுதலும் இருக்கும்'' என்றார். இதன்மூலம் நிதிஷ் குமார் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராஜ்யசபா எம்பியாவது உறுதியாகி உள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications