பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

களைகட்டுகிறது பீகார் சட்டசபை தேர்தல்.. இன்று பிரச்சார களம் வருகிறார் நிதிஷ் குமார்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலையொட்டி, அம்மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார் இன்று முறைப்படி பிரச்சாரத்தை துவங்க உள்ளார்.

243 தொகுதிகளை கொண்டது பீகார் சட்டசபை. அதில் 122 தொகுதிகளில், ஐக்கிய ஜனதாதளம் கட்சியும், 121 தொகுதிகளில், கூட்டணி கட்சியான பாஜகவும் போட்டியிட உள்ளன.

Nitish Kumar to hit Bihar Campaign with virtual rallies today

பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேர்தலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, முதல்வர் நிதீஷ்குமார் தனது வீடியோ மூலமான (மெய்நிகர்) தேர்தல் பொதுக் கூட்டத்தை இன்று நடத்துகிறார். இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும்.

ஆறு மாவட்டங்களில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கான ஜே.டி.யு வேட்பாளர்களுக்காக நிதிஷ் குமார் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதையடுத்து நாளை காலையும் பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார் நிதிஷ் குமார்.

அதேநேரம் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள கூட்டங்கள் இன்னும் இறுதிச் செய்யப்படவில்லை.

English summary
Bihar Chief Minister and JD(U) president Nitish Kumar will hit the campaign trail from today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X