ஆணுறுப்பை கத்தியால் அறுத்த நர்ஸ்.. வன்கொடுமை செய்ய முயன்ற டாக்டருக்கு ஆப்பு.. பீகாரில் திக் திக்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நண்பர்களுடன் சேர்ந்து செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பிசியோதெரபிஸ்ட் மருத்துவரின் ஆணுறுப்பை செவிலியர் கத்தியால் அறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மகாராஷ்டிர மாநிலம், தானேவில் 4 வயது சிறுமிகளுக்கு பள்ளியிலேயே பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது. கேரளத்தில் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளை மருத்துவரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்தது.

bihar crime

இவ்வாறு தொடர்ந்து, குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பல பெண்கள் பாலியல் பிரச்னைகளை நாள்தோறும் சந்திக்கின்றனர். இதற்கிடையே, பீகார் மாநிலத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து செவிலியர் ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை முயன்ற பிசியோதெரபிஸ்ட் மருத்துவரின் ஆண் உறுப்பை செவிலியர் கத்தியால் அறுத்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவரை காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒருவர் புதன்கிழமை இரவில் நோயாளிகளை பரிசோதனை செய்து கவனித்த பிறகு தனது வீட்டுக்குச் செல்வதற்காக புறப்பட்டுள்ளார். அப்போது, அதே மருத்துவமனையில் பணியாற்றும் பிசியோதெரபிஸ்ட் மருத்துவரும் அங்கு வந்துள்ளார்.

தனது நண்பர்களுடன் வந்த அந்த பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் திடீரென செவிலியர் இருந்த அறையை உள்பக்கமாக தாழிட்டுவிட்டு, செவிலியரைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அவர்களிடம் இருந்து போராடி தப்பிக்க முயன்றுள்ளார் அந்த செவிலியர். ஆனாலும், முடியவில்லை. அப்போது, செவிலியரின் கையில் கிடைத்த கத்தியை எடுத்து அந்த மருத்துவரின் ஆண் உறுப்புப் பகுதியில் சரமாரியாக குத்தி தாக்கத் தொடங்கியுள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்து உடனடியாக வெளியேறிய அந்த செவிலியர் 112 என்ற காவல் துறையினரின் உதவி எண்ணுக்கு அழைத்து நடந்த சம்பவம் குறித்து தெரிவித்து புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, போலீஸார் அந்த மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அங்கு, அதீதமான மது போதையில் ரத்த வெள்ளத்தில் பலத்த காயங்களுடன் கிடந்த மருத்துவர் மற்றும் அவர்களது நண்பர்கள் உள்பட 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து, அவர்களை மீட்ட போலீஸார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவர்கள் மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். நாட்டில் பாலியல் வன்கொடுமை பிரச்னைகள் தொடர்ந்து அதிகமாகி வரும் நிலையில், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பிசியோதெரபிஸ்டின் ஆணுறுப்பை பெண் வெட்டியுள்ள சம்பவத்துக்கு பெண்கள் பலரும ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற காமக் கொடூரர்களுக்கு சரியான பதிலடி என்று தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+