ஒடிஷா ரயில் விபத்து: பீகார் மாநிலத்தை சேர்ந்த 43 பேர் பலி- 88 பேர் கதி இன்னமும் தெரியவில்லை!
பாட்னா: ஒடிஷாவின் பாலசோர் பகுதியில் நிகழ்ந்த ரயில்கள் விபத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 43 பேர் பலியாகினர். மேலும் 88 பேர் கதி என்ன என்பது இன்னமும் தெரியவில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ஒடிஷா பாலசோர் அருகே விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 288 பேர் பலியானதாக அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியோ, பலி எண்ணிக்கையை மறைக்கிறது மத்திய பாஜக அரசு; மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பலரையும் காணவில்லை என குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் பீகார் மாநில அரசு தங்களது மாநிலத்தை சேர்ந்த 43 பேர், ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்துவிட்டனர்; 44 பேர் படுகாயமடைந்துள்ளனர்; மேலும் 88 பேர் நிலைமை என்ன என்பது தெரியவில்லை என கூறியுள்ளது. ஒடிஷா ரயில் விபத்தில் பலியான 100க்கும் மேற்பட்டோர் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என கூறப்படும் நிலையில் பீகார் அரசு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
முன்னதாக ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஒடிஷா ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என மத்திய அமைச்சர்கள் கூறி வந்தனர். இதனையடுத்து திடீரென சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்தது. தற்போது சிபிஐ நடத்தி வரும் விசாரணைகளில் பல்வேறு சந்தேகத்துக்குரிய கேள்விகளை முன்வைக்கப்படுவதால் விமர்சனங்களுக்கும் உள்ளாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications