Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹேய், எப்புட்றா.. ஒரே ரோட்டில், ஒரே நேரத்தில், ஒரே இளைஞனை ரவுண்டு கட்டிய 5 பெண்கள்.. அதிர்ந்த மக்கள்

ஒரு இளைஞருக்காக 5 இளம்பெண்கள் மோதிக்கொண்ட சம்பவம் வீடியோவாக வந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

பாட்னா: ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. ஒரு இளைஞனுக்காக 5 பெண்கள் நடுரோட்டிலேயே அடித்து கொண்டதை பார்த்து, பொதுமக்கள் அதிர்ந்து நின்றுவிட்டனர்.

4 நாட்களுக்கு முன்பு பஞ்சாப்பில் அந்த சம்பவம் நடந்தது.. பஞ்சாப் - ஜலந்தரில் ஒரு புகழ்பெற்ற ஃபேக்டரி இயங்கி வருகிறது.. இங்கு அந்த இளைஞர் வேலை பார்த்து வருகிறார்..

கடந்த ஞாயிற்றுக்கிழமை நைட் தன்னுடைய டியூட்டியை முடித்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.. அப்போது அவரை நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது.. அந்த காரில் 4 பெண்கள் இருந்துள்ளனர்...

ஸ்ப்ரே

ஸ்ப்ரே

அவர்கள் எல்லாருக்குமே 20 வயதுதான் இருக்கும்.. திடீரென அந்த இளைஞனின் அருகில் காரை நிறுத்திவிட்டு, ஒரு துண்டு சீட்டை அந்த நபரிடம் நீட்டி, அதில் உள்ள அட்ரஸ் எங்கே என்று கேட்டுள்ளனர்.. இளைஞரும், துண்டு சீட்டை வாங்கி அந்த அட்ரஸை பார்த்தார்.. அதற்குள் அந்த பெண்கள் அவர் முகத்தில், ஸ்பிரே ஒன்றை அடித்துள்ளனர்... அடுத்த செகண்டே இளைஞர் மயங்கி விழுந்துள்ளார்.... உடனே அவரை தங்களது காரில் கடத்திக் கொண்டு, கிளம்பிவிட்டனர்..

 நைட் டியூட்டி

நைட் டியூட்டி

இருட்டு நேரம் என்பதால், ஒரு மறைவான இடத்தில் காரை நிறுத்தியுள்ளனர்.. அந்த இளைஞரின் கை, கால்களை கட்டிப்போட்டு, பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியுள்ளனர். 4 பேருமே தண்ணி அடித்திருந்தார்களாம்.. கையில் மதுபாட்டிலையும் அந்த பெண்கள் வைத்துக் கொண்டு, இளைஞரையும் குடிக்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர்.. பிறகு 4 இளம்பெண்களும், அந்த இளைஞனை மாறி மாறி பலாத்காரம் செய்தார்களாம்.. நைட் டியூட்டி முடித்துவிட்டு நடந்து வந்த இளைஞனை கடத்திய அந்த பெண்கள், மறுநாள் விடிகாலை அதிகாலை 3 மணிக்குதான், இளைஞன் கை மற்றும் கண்களை கட்டி, ஏதோ ஒரு இடத்தில் இறக்கிவிட்டு போனார்களாம்.

அக்கிரமம்

அக்கிரமம்

கடைசியில், அந்த இளைஞன் நேராக போலீஸ் ஸ்டேஷன் போய், தனக்கு நடந்த அக்கிரமத்தையும், தன்னை பலாத்காரம் செய்ததையும் கண்ணீர் மல்க போலீசில் சொல்லி அழுதுள்ளார்.. இதைதவிர, ஊடகங்களுக்கும் பேட்டி தந்திருந்தார்.. அந்த பெண்கள் பணக்காரர்கள் போல தெரிந்தார்கள் என்றும் நன்றாக ஆங்கிலம் பேசினர் என்றும், தன்னிடம் 2 பெண்கள் பஞ்சாப் மொழியில் பேசினர் என்றும் கூறினார்.. அவர்களின் அடையாளங்களை பெற்றுக் கொண்ட போலீசாரும், அந்த 4 பெண்களை தேடி கொண்டிருக்கிறார்கள்.

 நைட் டியூட்டி

நைட் டியூட்டி

ஏற்கனவே, பெண்களையும், சிறுமிகளையும், பெண் குழந்தைகளையும், ஏன் பாட்டிகளையும்கூட விட்டுவைக்காமல், சில காமுகர்கள் பலாத்காரம் செய்து வருவது அதிகரித்துவிட்டது.. ஆனால், இந்த சம்பவம் அதற்கு மேல் அதிர்ச்சியை தந்துவருகிறது.. இரவு நேரங்களில் ஒரு ஆண் தனியாக செல்ல பாதுகாப்பில்லாமல் போய்விட்டதா நம் நாட்டில்?? இதோ இன்னொரு சம்பவம் பீகாரில் நேற்று நடந்துள்ளது.. ஒரு நபருக்கு 5 பெண்கள் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர் நடுரோட்டில்.. இந்த வீடியோவும் வெளியாகி விட்டது.

லவ்வர்

லவ்வர்

பீகார் மாநிலம் சோன்பூரில் இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியுடன் பைக்கில் சென்றுள்ளார்.. இதை அந்த இளைஞரின் இன்னொரு காதலி பார்த்துவிட்டார்.. அதுகுறித்து இளைஞரிடம் தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டார்.. இதை அந்த இளைஞரின் இன்னொரு காதலி பார்த்துவிட்டார்.. அவரும் ஆவேசமாக வந்து சண்டை போட்டார்.. இப்படியே மொத்தம் 5 காதலிகள் ஒரே இடத்தில் எதிர்பாராமல் வந்துவிட்டனர்.. இவர்களுக்கு நடுவே அந்த காதலன் மாட்டிக்கொண்டான். 5 பேரையும் ஒரே சமயத்தில் இளைஞர் சாமர்த்தியமாக ஏமாற்றி வந்துள்ளார்.

 கிழிந்த டிரஸ்

கிழிந்த டிரஸ்

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல, நேற்றைய தினம் நடுரோட்டிலேயே சிக்கிகொண்டார்.. 5 பெண்களும், கோவை சரளாவாக உருவெடுத்தனர்.. டிரஸ்கள் கிழியும் அளவுக்கு இவர்கள் சண்டை போட்டுக்கொண்டனர். ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்து இழுத்தும், டிரஸ்களை பிடித்து இழுத்தும், நடுரோட்டிலேயே குத்துச் சண்டை போட்டுக்கொண்டனர்.. இவர்கள் சண்டைப்போட்டதை அங்கிருந்த பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்ததுடன், சிரித்துக் கொண்டே வீடியோ எடுத்து கொண்டிருந்தனர்.. ஒருசிலர் இவர்களின் சண்டையை தடுக்க பார்த்தனர்..

லவ்வர்

லவ்வர்

ஆனால், யாரையுமே கன்ட்ரோல் செய்ய முடியவில்லை.. "அவன் என் லவ்வர், அவன் என்னுடைய பாய்பிரண்ட்" என்று 5 பேரும் சொல்லி கொண்டே மாற்றி மாற்றி சரமாரியாக அடித்து கொண்டார்கள்.. கடைசியில் இந்த சண்டை என்ன ஆனது என்று தெரியவில்லை.. முதல்ல அந்த இளைஞன் என்ன ஆனான் என்று தெரியவில்லை.. எனினும் இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த வீடியோவை பார்த்ததுமே நம் நெட்டிசன்கள், வழக்கம்போல் தங்கள் பாணியில் கமெண்ட்களை அள்ளி வீசி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+