நான் எல்லாம் இப்படி பேச மாட்டேன்.. மோடியை கிண்டல் செய்யும் ராஜ்நாத் சிங்.. என்ன நடக்கிறது பாஜகவில்?
பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரம் குறித்து பாஜக அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
பாட்னா: பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரம் குறித்து பாஜக அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
பிரதமர் மோடி தொடர்ந்து மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து மோசமான விமர்சனங்களை வைத்து வருகிறார். கடந்த வாரம் ராஜீவ் காந்தியை மோடி கடுமையான முறையில் விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
ராஜீவ் காந்தி குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கள் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்று இருக்கிறது. ராஜீவ் காந்தியை மிஸ்டர் கிளீன் என்று சொன்னார்கள். ஆனால் அவர்தான் நம்பர் ஒன் ஊழல்வாதி. உங்கள் அப்பாவின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியாகத்தான் முடிந்தது, என்று கூறினார்.

பெரும் சர்ச்சை
அவரின் இந்த பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜகவை சேர்ந்த சில தலைவர்களே எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து பாஜக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

பாட்னா பிரச்சாரம்
அவர் தனது பாட்னா பிரச்சாரத்தில், நான் சில கட்சிகளை நேரடியாக குற்றஞ்சாட்ட மாட்டேன். சில கட்சிகள் நாட்டிற்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்ல மாட்டேன். எல்லா கட்சிகளும் நாட்டிற்கு நிறைய நல்லது செய்து இருக்கிறது. அவர்கள் செயல்படும் விதம் வேறு, நாங்கள் செயல்படும் விதம் வேறு.

அரசியல் உணர்வு
இந்தியாவில் இருக்கும் அனைத்து அரசியல் அமைப்புகளையும் நாம் காக்க வேண்டும். இந்த அமைப்புகள்தான் நமது நாட்டை கட்டிக்காக்கிறது. அதை அழித்தால் நமது நாட்டில் ஜனநாயக அழிந்துவிடும். நமது நாட்டில் ஜனநாயகம் அழிந்தால், பெரிய பிளவு ஏற்படும்.

மோசமான வார்த்தை இல்லை
நான் எந்த முன்னாள் பிரதமருக்கும் எதிராக பேசியது கிடையாது. அவர்களுக்கு எதிராக நான் மோசமான வார்த்தைகளை உபயோகித்து கிடையாது. எந்தக் கட்சியாக இருந்தால் என்ன பிரதமர்களை எல்லாம் நான் கீழ்தரமாக விமர்சிக்க மாட்டேன், என்று பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விதமாக ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications