நள்ளிரவில் பரபரப்பு! டெல்லி செல்லவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. மிரண்ட பயணிகள்
பாட்னா: டெல்லி செல்லவிருந்த இண்டிகோ விமானத்திற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பரவல் காரணமாகச் சர்வதேச அளவில் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு துறையாக விமானப் போக்குவரத்துத் துறை உள்ளது.
கொரோனா பரவல் காலத்தில் கிட்டதட்ட அனைத்து நாடுகளும் விமான போக்குவரத்துக்குத் தடை விதித்தது. அப்போது சரக்கு விமானச் சேவை மட்டும் செயல்பட்டது.

கொரோனா
வைரஸ் பாதிப்பு குறைந்த பின்னர், முதலில் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சர்வதேச விமான போக்குவரத்தும் மெல்லத் தொடங்கப்பட்டது. இப்போது தான் பயணிகள் விமான போக்குவரத்து மெல்ல சீரடைந்து வருகிறது. அதேநேரம் தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருள் விலை, பயணிகளின் அச்சத்தால் விமான நிறுவனங்களுக்குச் சிக்கல் தொடரவே செய்கிறது.

விமான போக்குவரத்து
இதனிடையே விமான நிறுவனங்கள் வேறு சில பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களில் மட்டும் பல்வேறு விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டு உள்ளது. நல்வாய்ப்பாக இந்த தொழில்நுட்ப கோளாறுகள் பெரியளவில் இல்லை. இதனிடையே விமானம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்
பீகாரின் பாட்னாவில் இருந்து இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான 6E-2126 விமானம் டெல்லி செல்ல தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் ஏறிய நிலையில், விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் இருந்த ஒருவர் தனது பையில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றப்பட்டனர்.

புரளி
இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைவாக வந்து ஒட்டுமொத்த விமானத்தையும் சோதனை செய்தனர். அதில் அந்த பயணி கூறியதைப் போல வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. அதன் பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிய வந்தது. இதையடுத்து இதையடுத்து வெடிகுண்டு விடுத்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications