இஎம்ஐ கட்டவில்லை என தனியார் ஏஜெண்ட் மூலமாக வாகனங்களை பறிமுதல் செய்வது சட்ட விரோதம்.. பாட்னா ஐகோர்ட்
பாட்னா: கார் மற்றும் பைக் உள்ளிட்டவைகளை நிதி உதவி அளிக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மாத கடன் தவணை (இஎம்.ஐ) செலுத்தவில்லை என்பதற்காக தனியார் ஏஜெண்ட்கள் மூலம் வாகனங்களை பறிமுதல் செய்யக்கூடாது என்று பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.
கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை வாங்க விரும்பும் பலரும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்றே வாங்குவதை பார்க்க முடிகிறது. குறிப்பிட்ட தொகையை செலுத்தி வாகனங்களை வங்கிய பிறகு மாதம் தோறும் ஒரு தொகையை நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வசூலித்து வருகின்றன. சில நேரங்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உரிய நேரத்தில் இஎம்ஐ கட்ட தவறினால் வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் கூட ஈடுபடுகின்றன.

பெரும்பாலும் முன்னறிவிப்பு எதுவும் இன்றி தனியார் ஏஜெண்ட் மூலமாகவே இதுபோல வாகன பறிமுதல் நடப்பதாக சொல்லப்படும் நிலையில், இது தொடர்பான முக்கிய உத்தரவு ஒன்றை பாட்னா உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:- கார்களுக்கான இ.எம்.ஐ கட்ட சரியாக தவறினால் கடன் அளித்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், வாகனங்களை பறிமுதல் செய்யும் விவகாரம் தொடர்பாக பீகார் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுக்களை நீதிபதி ராஜீவ் ரன்ஜன் பிரசாத் அமர்வு விசாரித்தது.
அப்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இ.எம்.ஐ. கட்டவில்லை என்பதற்காக ஏஜெண்ட்கள் மூலமாக வாகனங்கள் பறிமுதல் செய்வது என்பது சட்ட விரோதம் என்றும் அடிப்படை வாழ்வு உரிமைக்கு எதிரானது எனவும் கடுமையாக தெரிவித்தது. மேலும், EMI கட்ட தவறினாலும் கூட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஏஜெண்ட்கள் மூலமாக வாகனங்களை பறிமுதல் செய்யக்கூடாது எனவும் இதுபோன்ற மீட்பு ஏஜெண்ட்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

வாகன கடன்கள் முறையாக செலுத்த வில்லை என்றால் வாடிக்கையாளர் அடைமானம் வைத்த சொத்துக்கள் உள்ளிட்டவற்றை மீட்கும் நடவடிக்கையை உத்தரவாத விதிகளை பின்பற்றி மட்டுமே அவற்றை மீட்கும் நடவடிக்கையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஈடுபட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னா நகரில் கார் வாங்கிய பிறகு அதற்கான மாத தவணை தொகையை திருப்பி அடைக்காமல் இருந்ததால் வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் 5 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தள்ளுபடி செய்த பாட்னா உயர் நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை வழங்கியிருக்கிறது. அதேபோல், வாகனங்களை பறிமுதல் செய்வதற்காக தனியார் ஏஜெண்ட்களை நாடிய வங்கிககள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரூ 50 ஆயிரம் அபராதம் விதித்தும் நிதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications