பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ‛பச்சைக்கொடி’.. ஓகே சொன்ன பாட்னா உயர்நீதிமன்றம்! பரபர உத்தரவு
பாட்னா: பீகாரின் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளும் மாநில அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனால் அந்த கணக்கெடுப்பு பணி நிறுத்தப்பட்ட நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின்போது சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டது.
பீகாரில் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார். இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

கடந்த ஜனவரி மாதம் முதல்கட்ட பணி நடந்து முடிந்தது. இந்த பணி ஜனவரி மாதம் 7 ம் தேதி முதல் ஜனவரி 21ம் தேதி வரை நடந்தது. மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் நோக்கில் அரசு செயல்பட இந்தக் கணக்கெடுப்பு உதவும் என்ற வகையில் இந்த பணி தொடங்கப்பட்டது.
அரசு அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு 2வது கட்ட சாதிவாரி கணக்கெடுப்பு பணி ஏப்ரல் 15ம் தேதி முதல் மே மாதம் 15ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி 2ம் கட்ட பணிகளும் துவங்கியது. சாதி, துணை சாதி, மதம், பொருளாதார நிலை ஆகியவை குறித்த விவரங்கள் மக்களிடம் சேகரிக்கப்பட்டுவந்தன.
இந்த நிலையில், பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்தி வருவதற்கு எதிராக பாட்னாவில் உள்ள அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், 'சாதிவாரிக் கணக்கெடுப்பு, அரசியலமைப்புக்கு எதிரானது' என்று கூறி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 2ம் கட்ட சாதிவாரி கணக்கெடுப்பு பணி முடிவடைய 11 நாட்கள் இருந்த நிலையில் இந்த தடை விழுந்தது.
இதற்கிடையே தான் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கேவி சந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதோடு மாநில அரசு தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள உத்தரவிட்டது. இதன் மூலம் மீண்டும் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி துவங்கி நடைபெற உள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications