மாறும் வரலாறு! மோதலுக்கு முடிவுரை! பல்டி அடித்த நிதிஷ் குமார்! ஜனாதிபதி தேர்தலுக்காக முக்கிய முடிவு
பாட்னா: பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளரான திரெளபதி முர்முவுக்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கட்சி கூட்டணியில் விரிசல் போக்கு உள்ள நிலையில் நிதிஷ் குமாரின் இந்த முடிவு ஆச்சரியமளிக்கிறது.
Recommended Video
பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்.
இந்நிலையில் சமீப காலமாக பாஜக- ஐக்கிய ஜனதாதளம் கட்சியினர் இடையே மோதல் போக்கு உள்ளது. குறிப்பாக முதல்வர் நிதிஷ் குமார் கூட பாஜகவினரை விமர்சனம் செய்து வந்தார்.

ஜனாதிபதி தேர்தலில் பல்டி
இதனால் பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணி விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதோடு பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி ஆதரவு தெரிவிக்காது என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் நிதிஷ் குமார் பல்டி அடித்துள்ளார்.

திரெளபதி முர்முவுக்கு ஆதரவு
அதாவது ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛ பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எப்போதும் பெண்களுக்கான அதிகாரம், நலிவடைந்த பிரிவினரின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பழங்குடி வகுப்பை சேர்ந்த திரெளபதி முர்மு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த முடிவை வரவேற்று திரெளபதி முர்முக்கு ஐக்கிய ஜனதாதளம் கட்சி ஆதரவு வழங்கும். அவரது வெற்றி நிச்சயம்'' என தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு நன்றி தெரிவித்த நிதிஷ்
மேலும் இதுதொடர்பாக இன்று நிதிஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‛‛திரௌபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பழங்குடியின பெண். நாட்டின் உயரிய பதவிக்கு பழங்குடியின பெண் ஒருவர் பரிந்துரைக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. திரெளபதி முர்மு இதற்கு முன்பு அமைச்சராக இருந்துள்ளார். ஒடிசா மற்றும் ஜார்கண்ட் ஆளுநராகவும் செயல்பட்டுள்ளார். இவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த பிரதமருக்கு நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.

வரலாறு மாறுகிறது
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி கடந்த இரண்டு முறை நடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எதிரான வேட்பாளர்களுக்கு தான் ஓட்டளித்தது. 2017ல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சிகளுடன் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி கூட்டணி அமைத்து இருந்தது. அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்தை பாஜக ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியது. இதையடுத்து ராம்நாத் கோவிந்தை நிதிஷ் குமார் கட்சி ஆதரித்தது. அதற்கு முன்பு 2012ல் நிதிஷ் குமார் கட்சி தேசிய ஜனநாயக கட்சியின் ஒருபகுதியாக இருந்தாலும் கூட காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரணாப் முகர்ஜியை ஆதரித்து ஓட்டளித்தது. இந்நிலையில் தான் தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாஜக முன்நிறுத்தும் திரெளபதி முர்முவுக்கு நிதிஷ் குமார் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications