பீகாரில் பாஜக தோற்கப்போகுது.. 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது ஜனநாயக படுகொலை - ஸ்டாலின் அட்டாக்
பாட்னா: பீகாரில் ராகுல் காந்தி ‛வாக்காளர் உரிமை யாத்திரை' மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அதன்பிறகு பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின், ‛‛ பீகார் தேர்தலில் பாஜக தோற்கப்போகிறது. பீகார் தேர்தலில் ராகுல் காந்தி - தேஜஸ்வி யாதவ் வெற்றியை தேடி தருவார்கள். நியாயமாக வாக்குப்பதிவு நடந்தால் பாஜக கூட்டணி தோற்றுவிடும் என்று மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறார்கள். 65 லட்சம் பீகார் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை. சொந்த மண்ணில் பிறந்து வாழ்ந்த மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதை விட பயங்கரவாதம் இருக்க முடியுமா?'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு எதிராக ராகுல் காந்தி 'வாக்காளர் அதிகாரம்' என்கிற பெயரில் யாத்திரை நடத்தி வருகிறார். பீகார் முழுக்க பயணிக்கும் அவர் மக்களை களத்தில் சென்று சந்தித்து தேர்தல் ஆணையம் மீதான தனது குற்றச்சாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
பீகார் மாநிலம் தர்பங்காவில் இன்று நடந்த யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். ராகுல் காந்தியுடன், கனிமொழி எம்பி, பிரியங்கா காந்தி எம்பி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர். அதன்பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். முதல்வர் ஸ்டாலின் தமிழில் உரையாற்றி வருகிறார். முக ஸ்டாலின் உரையை இன்னொருவரின் பீகார் மக்களுக்கு புரியும் வகையில் மொழிப்பெயர்த்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:
பீகார் மக்களை பார்ப்பதற்காக 2 ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து வந்திருக்கிறேன். பீகார் என்றாலே லாலு பிரசாத் யாதவ் தான் நினைவுக்கு வருவார்கள். கலைஞரும், லாலுவும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த குழந்தையாக உழைத்து கொண்டிருக்கிறார் தேஜஸ்வி யாதவ். கடந்த ஒரு மாதமாக இந்தியாவே பீகாரை தான் பார்த்து கொண்டு வருகிறது. இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் பீகார் போர்க்கொடி தூக்கி உள்ளது.
ராகுல் காந்தி - தேஜஸ்வி யாதவின் நட்பு அரசியல் ரீதியானது அல்ல. 2 உடன்பிறப்புகளின் நட்பாக உள்ளது. ஜனநாயகத்தை காக்க மக்கள் நலனுக்காக இப்போது ஒன்று சேர்ந்துஉள்ளீர்கள். பீகார் தேர்தலில் உங்களுக்கு வெற்றியை பெற்று தருவது இந்த நட்பு தான். ராகுல், தேஜஸ்வி செல்லும் இடமெல்லாம் மக்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள்.
பீகார் தேர்தலில் பாஜக தோற்கப்போகிறது. பீகார் தேர்தலில் ராகுல் காந்தி - தேஜஸ்வி யாதவ் வெற்றியை தேடி தருவார்கள். அதனால் தான் இந்த வெற்றியை தடுக்க பார்க்கிறார்கள். நியாயமாக வாக்குப்பதிவு நடந்தால் பாஜக கூட்டணி தோற்றுவிடும் என்று மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்தை கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாற்றிவிட்டார்கள். 65 லட்சம் பீகார் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை. சொந்த மண்ணில் பிறந்து வாழ்ந்த மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதை விட பயங்கரவாதம் இருக்க முடியுமா?. அனைத்து அடையாள அட்டை இருந்தாலும் அவர்களுக்கு முகவரி இல்லாமல் ஆக்கி உள்ளனர்'' என்றார்.
-
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியால் இந்த ஒரு தோல்வியையே தாங்க முடியலையா? ராகுல் மீது ஏன் வன்மம்? மாணிக்கம் தாகூர் கேள்வி












Click it and Unblock the Notifications