"இந்த" பிஸ்கெட்டை சாப்பிடலை ஆண் குழந்தைகளுக்கு அசம்பாவிதம்.. வதந்தியால் விற்று தீர்ந்த பாக்கெட்டுகள்
பாட்னா: பீகார் மாநிலத்தில் பரவிய வதந்தி காரணமாக கடைகளில் பார்லே ஜி பிஸ்கெட் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதிலும் ஒரு பாக்கெட் பிஸ்கெட் ரூ 5 ஆக இருந்த நிலையில் தற்பேது ரூ 50-க்கு விலை போனது.
வடமாநிலங்களான பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலஹ்களில் ஆண்டுதோறும் ஜிதியா எனும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின் போது திருமணமான பெண்கள் 24 மணி நேரமும் நோன்பு இருக்க வேண்டும்.
தங்கள் குழந்தைகள் நோயின்றி மகிழ்ச்சியுடன் வாழ இந்த நோன்பு இருக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி இந்த நோன்பு பண்டிகை கொண்டாடப்பட்டது.

பீகாரில் வதந்தி
இந்த பண்டிகையையொட்டி பீகாரின் சிதாமர்ஹி மாவட்டத்தின் சில இடங்களில் வதந்தி ஒன்று பரவியது. ஆண் குழந்தைகள் ஜிதியா நோன்பின் போது பார்லே ஜி பிஸ்கெட்டை சாப்பிட வேண்டும். ஒரு வேளை அவர்கள் சாப்பிடாவிட்டால் அவர்களுக்கு அசம்பாவித சம்பவங்கள் நேரும் என வதந்தி பரவியது.

வதந்தி காட்டுத் தீ
இதை பீகார் மக்கள் நம்பி ஏமார்ந்தனர். இந்த வதந்தி காட்டுத் தீ போல் பரவியதை அடுத்து சமூகவலைதளங்களில் வைரலானது. இதனால் பார்லே ஜி பிஸிகெட் விற்பனை செய்யப்படும் கடைகளில் கூட்டம் கூடியது. பல கடைகளில் பார்லே ஜி பிஸ்கெட் வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கடைக்காரர்கள்
இதையடுத்து இதுதான் சாக்கு என நினைத்த கடைக்காரர்கள் ரூ 5 மதிப்புள்ள அந்த பிஸ்கெட்டை ரூ 50க்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்டினர். பலர் இந்த பிஸ்கெட்டை பதுக்கி வைத்து மேலும் அதிக விலைக்கு விற்றனர். குறிப்பாக ஊரக பகுதிகளான பர்கானியா, தேஹே, நான்பூர், பாஜ்பட்டி, மேஜார்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் வதந்தி பரவியது.

ஸ்டாக்குகள்
மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கு அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் இந்த வதந்தி பரவியது. இந்த வதந்தி எப்படி பரவியது என்று இதுவரை கண்டறியப்படவில்லை. மேலும் இப்படி ஒரு வதந்தியை எப்படி பீகார் மக்கள் நம்பினார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எது எப்படியோ பார்லே ஜி பிஸ்கெட் வைத்திருந்தவர்கள் தங்களிடம் இருந்த ஸ்டாக்குகளை விற்றுத் தீர்த்தனர்.












Click it and Unblock the Notifications