Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்த கொடூர தந்தை... ரகசிய வீடியோ எடுத்து போலீசில் சிக்க வைத்த மகள்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்தில் 18 வயது நிரம்பிய மகளை அவரது தந்தை மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்து வந்தார். மனம் உடைந்த அந்த பெண் பாலியல் பலாத்கார சம்பவத்தை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளத்தில் நீதி கேட்ட நிலையில் போலீசார் அவரது தந்தையை கைது செய்தனர்.

இந்தியாவில் பாலியல் பலாத்கார சம்பவங்களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதுதொடர்பாக போலீசார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.

இருப்பினும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கிறது. பாதிக்கப்படுபவர்களில் பலர் போலீசில் புகார் அளித்து தவறு செய்த நபர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்கின்றனர். சிலர் மிரட்டலுக்கு பயந்து அமைதியாகி விடுகின்றனர்.

ஆசிரியரான தந்தை

ஆசிரியரான தந்தை

இந்நிலையில் தன்னை தொடர்ந்து பலாத்காரம் செய்த கொடூர தந்தையை வித்தியாசமான முறையில் 18 வயது இளம்பெண் போலீசில் சிக்க வைத்துள்ளார். பீகார் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு: பீகார் மாநிலம் சமஸ்திபூர் அருகே உள்ள ரோசிரா பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவரது தந்தைக்கு 50 வயது ஆகிறது. இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

இந்நிலையில் இளம்பெண்ணை மிரட்டி அவரது தந்தை பாலியல் தொல்லை மற்றும் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது. இந்த கொடூர சம்பவம் தொடர்ந்ததால் சிறுமி மனதளவில் பாதிக்கப்பட்டார். இதுபற்றி குடும்பத்தினரிடம் கூறினாலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

வீடியோவாக பதிவு

வீடியோவாக பதிவு

இதனால் தனது தந்தை செய்யும் கொடுமைகளுக்கு உரிய தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணினார். இதற்கு ஆதாரங்கள் வேண்டும் என்பதால் அதற்காக மாற்றுவழியை யோசித்தார். அதன்படி தந்தை வன்புணர்வு செய்ததை அவருக்கு தெரியாமல் சிறுமி வீடியோவாக பதிவு செய்தார். பிறகு இந்த வீடியோவின் ஒருபகுதியை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சிறுமி நீதி கேட்டார்.

தந்தை கைது

தந்தை கைது

இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில் போலீசார் விசாரணையை துவக்கினர். மேலும் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியும் தனது தந்தை மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். இதுபற்றி ரோசிரா துணை எஸ்பி சாகியர் அக்தர் கூறுகையில், ‛‛புகாரின் அடிப்படையில் சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளோம். விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.'' என்றார்.

தாய், தாய்மாமன் குறித்து விசாரணை

தாய், தாய்மாமன் குறித்து விசாரணை

இதற்கிடையே சிறுமி மீதான வன்கொடுமை பற்றி அறிந்தும் அவரது தாய் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்துள்ளதாகவும், இதற்கு தாய்மாமாவும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த வழக்கில் இவர்களும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+