சட்டென சரிந்த மேடை.. ஓடி வந்த பாதுகாவலர்கள்.. துளியும் பதறாமல் கூலாக ராகுல் காந்தி செய்த செயல்.. செம
பாட்னா: பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் திடீரென மேடை சரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், இன்னும் ஒரு கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

தேசியளவில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்து அரசியல் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பரபரப்பு: இதற்கிடையே காங்கிரஸின் ராகுல் காந்தி பீகார் மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கலந்து கொண்ட மேடை திடீரென சரிந்ததால் கொஞ்சம் பரபரப்பு ஏற்பட்டது.
பட்லிபுத்ரா மக்களவைத் தொகுதியில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் மகள் மிசா பார்தி போட்டியிடும் நிலையில், அவருக்காகப் பிரச்சாரம் செய்ய ராகுல் காந்தி பீகார் மாநிலக்கிற்கு சென்றிருந்தார். அங்கு பாலிகஞ்ச் என்ற இடத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
ராகுல் காந்தி: அப்போது ராகுல் காந்தியின் கையை பிடித்து பாரதி அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்று கொண்டு இருந்தார். அப்போதே மேடை கொஞ்சம் சரிவடைந்து இருந்தது. இதனால் மேடையில் இருந்த தலைவர்கள் தடுமாறியே அதில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். மேடையில் தலைவர்கள் தடுமாறுவது தெளிவாகத் தெரிந்தது. ஒரு சில அடிகள் எடுத்த வைத்தவுடன் மேடை மேலும் சரிந்தது.
இப்போது அருகே இருந்த பாரதி டக்கென ராகுல் காந்தி கையைப் பிடித்தார்.. தடுமாறிய ராகுல் காந்தி மெல்ல பேலன்ஸ் ஆகி நின்றார். மேலும், அருகே இருந்த பாதுகாவலர்களும் அவரை தாங்கி பிடிக்க வந்தனர். இருப்பினும், அவர்களை வர வேண்டாம் என்ற ராகுல் காந்தி... அங்கிருந்தபடியே மக்களை நோக்கிக் கையசைத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
லோக்சபா தேர்தல்: பீகார் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 40 லோக்சபா இடங்கள் உள்ளன. பீகாரில் இதுவரை 32 இடங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக நாட்டில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications